பஹல்காம் தாக்குதல் : ஆவேசப்பட்ட ரஜினிகாந்த்..!

பஹல்காம் தாக்குதல் குறித்து ஆவேசமாக பேசி உள்ளார் ரஜினிகாந்த்.

Pahalgam attack Rajinikanth enraged..!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெய்லர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஷூட்டிங் முடிந்து வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது அவர்கள் காஷ்மீர் தாக்குதல் குறித்து கேட்டபோது ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார்.

தீவிரவாத செயல் கடுமையாக கண்டிக்கத்தக்கது காஷ்மீரில் அமைதி திரும்பியிருப்பது எதிரிகளுக்கு பிடிக்கவில்லை அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என இப்படி எல்லாம் செய்றாங்க கண்டிப்பாக அதை செய்தவர்களுக்கு அதன் பின்னால் இருப்பவர்களுக்கும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கண்டுபிடித்து கடுமையான தண்டனையை கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் மறுபடியும் அப்படி செய்ய வேண்டும் என அவர்கள் கனவிலும் நினைக்க கூடாது அப்படி செய்வார்கள் என நம்பிக்கை இருக்கிறது என்று பேசி உள்ளார். ரஜினியின் இந்த பேச்சிற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த கோரமான தீவிரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் குறிப்பாக ஆண்களை குறிவைத்து தாக்கியது பெரும் கண்டனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

Pahalgam attack Rajinikanth enraged..!
indiaLatest newsLatest updatePahalgam attackPahalgam attack: Rajinikanth enraged..!Rajinikanthகாஷ்மீர்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்பஹல்காம் தாக்குதல்ரஜினி