பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் அடுத்த மிகப்பெரிய திரைப்படமான ‘மஹாகாளி’ முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
RKD Studios நிறுவனம் சார்பில் ஆர்.கே. துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்திற்கு, பிரசாந்த் வர்மா கதையை உருவாக்கியுள்ள நிலையில், பூஜா அபர்ணா கொல்லுரு இயக்குநராக பணியாற்றுகிறார்.
இந்திய புராணக் கதையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படம், IMAX வடிவில் வெளியாகும் வகையில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகள் மற்றும் மிகப்பெரிய திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ரோஹித் சராஃப், தனது அனைத்து காட்சிகளின் படப்பிடிப்பையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். அதேபோல், சுக்ராச்சார்யா கதாபாத்திரத்தில் நடித்துள்ள அக்ஷய் கன்னா தனது பகுதிகளின் படப்பிடிப்பை ஏற்கனவே முடித்துள்ளார்.
மஹாகாளி என்ற டைட்டில் கதாபாத்திரத்தில் பூமி ஷெட்டி நடித்துள்ளார். தெய்வீகமும் உக்கிரமும் கலந்த அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அக்ஷய் கன்னாவின் சுக்ராச்சார்யா தோற்றமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு திரைப்படத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் இணைந்துள்ள இப்படம், ஆன்மிகப் பிரம்மாண்டத்தையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைக்கும் வகையில் உருவாகி வருகிறது. ஸ்மரண் சாய் இசையமைக்க, சுரேஷ் ரகுது ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை ஸ்ரீ நாகேந்திர தங்காலா கவனித்து வருகிறார்.
தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் புரமோஷன் அப்டேட்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் குழு:
கதை: பிரசாந்த் வர்மா
இயக்கம்: பூஜா அபர்ணா கொல்லுரு
தயாரிப்பு: RKD Studios (ஆர்.கே. துக்கல், ரிவாஸ் ரமேஷ் துக்கல்)
இசை: ஸ்மரண் சாய்
ஒளிப்பதிவு: சுரேஷ் ரகுது
தயாரிப்பு வடிவமைப்பு: ஸ்ரீ நாகேந்திர தங்காலா
கிரியேட்டிவ் டைரக்டர்: சினேகா சமீரா
மக்கள் தொடர்பு: யுவராஜ்