ரஜினி எழுதும் சுயசரிதை பற்றி, இயக்குநர் லோகேஷ் விழிப்புணர்வு தகவல்கள்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படப்பிடிப்பின் நடுவில் கிடைக்கும் ஓய்வு நேரங்களில் தன் சுயசரிதையை எழுதும் பணியில் ஈடுபட்டு வருகின்றார் என லோகேஷ் தெரிவித்தார். மேலும் அவ்வப்போது என்ன எழுதிக்கொண்டு இருக்கின்றேன் என லோகேஷிடம் ரஜினி தெரிவிக்கின்றார்.

இது குறித்து லோகேஷ் கனகராஜ் பகிர்ந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது. ‘ரஜினி சார் சொல்லும் விஷயங்கள் வியக்கத்தக்க வகையில் இருக்கும். அவர் சொல்லிய விஷயங்களில் இருந்து மிக முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டேன்.

அதுமட்டுமல்லாமல், கண்டிப்பாக ரஜினியின் சுயசரிதையை படித்தால், இந்த விஷயத்தை அனைவரும் கற்றுக்கொள்வார்கள்.நம் உடலை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை ரஜினியின் சுயசரிதை மூலம் கற்றுக்கொண்டேன். உடல் குறித்து விழிப்புணர்வாக இருக்கவேண்டும் என்பதை தெரிந்துகொண்டேன். உடம்புதான் முக்கியம், அதை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பதை நான் தெரிந்துகொண்டேன்.

ரஜினிகாந்த் ஒரு சமயத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு தீவிரமாக சிகிச்சை பெற்று குணமடைந்தார். அதற்கு என்ன காரணம், உடல்நிலை பாதிக்கப்பட்டது எதனால்? என ரஜினி சார் பலமுறை கூறியிருக்கின்றார். மேலும், அதிலிருந்து தான் எப்படி மீண்டு வந்தேன் என்பதையும் பேசியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாக்களில் கூட ரஜினி இதைப்பற்றி பேசியிருக்கிறார். தீங்கான பழக்கங்களால் நம் உடலை நாமே கெடுத்துக்க கூடாது என ரஜினி பலமுறை தன் சொந்த அனுபவத்தில் இருந்து அட்வைஸ் செய்திருக்கின்றார்’ என லோகேஷ் கூறினார்.

இந்நிலையில், தனது சுயசரிதையை ரஜினி படமாக எடுப்பாரா? அப்படி ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் யார் ரஜினியாக நடிப்பார்? எனவும் ரசிகர்கள் ஆர்வமாய் கேட்டு வருகின்றனர்.

lokesh kanagaraj about his learnings from rajinikanth life
director lokesh kanagarajlifeRajinikanthசுயசரிதைரஜினி