38 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்த பிரியதர்ஷன் – லிஸ்ஸி!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை லிஸ்ஸி மீண்டும் கேமரா முன் தோன்றி ரசிகர்களுக்கு இனிய ஆச்சரியத்தை அளித்துள்ளார். கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனத்தின் புதிய விளம்பரப் படத்தில் அவர் நடித்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கியுள்ள இந்த விளம்பரத்தில், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பிரபு கணேசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். பல ஆண்டுகளுக்குப் பிறகு லிஸ்ஸி மீண்டும் திரையில் தோன்றியிருப்பது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த விளம்பரத்தின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், 1988-ஆம் ஆண்டு வெளியான சித்ரம் திரைப்படத்திற்குப் பிறகு, சுமார் 38 ஆண்டுகள் கழித்து பிரியதர்ஷன் மீண்டும் லிஸ்ஸியை இயக்கியிருப்பது தான். நீண்ட காலத்திற்குப் பிறகு மீண்டும் இணைந்த இந்த இயக்குநர்–நடிகை கூட்டணி, திரையுலக ரசிகர்களுக்கு மறக்க முடியாத ரீயூனியனாக அமைந்துள்ளது.

இந்த விளம்பரம் வெளியாகியுள்ள நிலையில், லிஸ்ஸியின் கம்பேக் தோற்றமும், பிரியதர்ஷனுடன் அவர் மீண்டும் இணைந்திருப்பதும் சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.

Kalyani PriyadarshLissyLissy returns after 38 years reunites with PriyadarshanPrabhuPriyadarshan