முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்த குஷ்பு… என்ன கோரிக்கை தெரியுமா?

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு எனத் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கும், பணியாற்றுபவர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், தயாரிப்பாளர்களுக்குச் சேனல்களிடமிருந்து அதற்கேற்ற சம்பள உயர்வு கிடைப்பதில்லை” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தனி இடம் வேண்டும் என முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, சங்கத்திற்கான நிதியைத் திரட்டும் நோக்கில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய குஷ்பு, அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ஆதரவு அளிப்பதாகக் கூறிய நடிகர் சிம்புவுக்கும் நன்றி தெரிவித்தார்.

Cm VijayKhushbuKhushbu Urges CM Vijay to Allocate Separate Space for TV Producers’ Association