‘லோகேஷ் கனகராஜ் மீது, கார்த்தி கடுப்பு..

கைதி-2 திரைப்படம் எப்போது உருவாகும் என்பது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் ஜனவரி 14-ந்தேதி வெளியானது. இதனை விளம்பரப்படுத்த சில திரையரங்குகளுக்கு சென்று வருகிறார். இச்சூழலில், அல்லு அர்ஜுன் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் சென்றுவிட்டார். அப்படியென்றால் ’கைதி 2’ நிலை என்ன? என்ற கேள்வி எழுகிறது.

இது குறித்து கார்த்தி தெரிவிக்கையில், ‘லோகேஷ் கனகராஜ் தான் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் லோகேஷ் கனகராஜின் மீது கார்த்தி சற்று அதிருப்தியில் இருப்பது தெளிவாகிறது. ஏனென்றால் ‘கைதி 2’ குறித்து பல மாதங்களாக பேசப்பட்டு வந்தாலும், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக வேறு படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கைதி 2’ உருவாகவுள்ளது. இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தாலும், எப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார் என்பது தான் கேள்வியாக சுற்றி வருகிறது. அல்லு அர்ஜுன் படத்தை முடிக்க எப்படியும் இரண்டு ஆண்டுகளாகும். அதுவரை ‘கைதி 2’ எப்போது என்ற கேள்வி தொடர்ந்துகொண்டே தான் இருக்கும். மேலும் ‘லோகேஷ் ஹீரோவாக டிசி என்ற படத்தில் நடித்தும் வருவது குறிப்பிடத்தக்கது.

karthi angry speech from lokesh kanagaraj
director lokesh kanagarajkaithi2 moviekarthiகைதி 2லோகேஷ் கனகராஜ்