பிரபலங்கள் பலர் இணைந்துள்ள ‘கண்ணப்பா’ பட தகவல்கள் காண்போம்..
‘பெரிய புராணக் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் ‘கண்ணப்பா’ திரைப்படம் குறித்து யாராவது ட்ரோல் செய்தால், அவர்கள் சிவபெருமானின் கோபத்துக்கு ஆளாவீர்கள்’ என்று முன்னதாக விடுத்த நடிகர் ரகுபாபுவின் எச்சரிக்கை கவனம் பெற்றுள்ளது.
- Advertisement -
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ள சிவ பக்தர் கண்ணப்பரின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, படத்தை தயாரித்திருப்பதாக இயக்குநர் கூறியுள்ளார்.
மிக பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ்குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில், கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. படத்தில் தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார்.
மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல்அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். ‘கண்ணப்பா’ திரைப்படம் வரும் 27-ந் தேதி தமிழ் , தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் , கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரு பான் இந்தியா திரைப்படமாக வெளியாகவுள்ளது.