ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படக்குழு: கோலிவுட் வட்டாரம் பெருமிதம்

மணிரத்னம் இயக்கத்தில், கமல், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ பற்றிய அப்டேட்ஸ் பார்ப்போம்..

இந்தியாவை தாண்டி தமிழ் படங்களுக்கு அதிக வரவேற்பு தரும் நாடாக அமெரிக்கா, சவுதி அரேபியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகள் இருக்கின்றன. இங்கு தமிழ் மக்கள் அதிகம் வசிப்பதால், தமிழ் படங்களை பார்த்து ரசிக்கிறார்கள். வசூல் சாதனையும் படைக்கிறது.

இந்நிலையில், கமல்ஹாசன் முதல் முறையாக ஆஸ்திரேலியாவில் ‘தக் லைஃப்’ படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் தமிழ் படங்களுக்கு பிசினஸ் பெரிய அளவில் கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

உலக அளவில் தமிழ் படங்களுக்கு அங்கீகாரத்தை பெற்று தந்தவர் கமல். அதேபோன்று ஆஸ்திரேலியாவிலும் அதே பாணியை பின்பற்ற இருக்கிறார் ஆஸ்திரேலியோவை தேர்ந்தெடுத்துருப்பது என்ன காரணம் என தெரியவில்லை. ஆனால், அவரது முயற்சிக்கு தமிழ் சினிமா தலைவணங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

கமல்ஹாசன் தனது படங்களில் புதுமையான செயல்களை கொண்டு வருவார். அவ்வகையில் ‘தக் லைஃப்’ படத்தில் ஏஐ பயன்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக ‘மன்மதன் அம்பு’ படத்தின் இசை வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முன்பு, மே 16-ந்தேதேதி சென்னை- நேரு ஸ்டேடியத்தில் இசை வெளியீீட்டு விழா நடைபெறுகிறது. இதில், படத்தின் டிரைலரும் வெளியிடப்படுகிறது. ரசிகர்களுக்கு கோடைகால கொண்டாட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

actor kamal haasandirector maniratnamthug life movieகமல்ஹாசன்சிம்பு