வெளிநாட்டில் கூட செய்யக்கூடிய விஷயத்தை என் நாட்டில் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக கொண்டாடப்படுபவர் அனிருத் இவர் தற்போது கூலி, ஜனநாயகன், மதராசி, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, ஜெயிலர் 2 போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.
இந்த நிலையில் தற்போது அனிருத் அவருடைய வித்தியாசமான ஆசை குறித்து பேசி உள்ளார். அதாவது நான் யார் கண்ணுக்கும் தெரியாமல் போகும் வரம் கிடைத்தால் முதலில் பேருந்தில் பயணம் செய்வேன் பள்ளி நாட்களில் எப்படி பேருந்து இருக்கையில் அமர்ந்து கொண்டு பயணம் செய்தேனோ அப்படி பயணம் செய்ய தற்போது விரும்புகிறேன் ஆனால் அதனை என்னால் இப்போது செய்ய முடிவதில்லை அதை ரொம்ப மிஸ் பண்றேன் வெளிநாட்டுக்கு சென்றால் பேருந்தில் பயணம் செய்ய முடிகிறது ஆனால் என்னோட நாட்டில் அப்படி செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.