பல நாட்களாக தொடரும் கேள்வி.. முற்றுப்புள்ளி வைத்து ஜிவி பிரகாஷ் கொடுத்த பதில்..!

பல நாட்களாக தொடரும் கேள்விக்கு ஜிவி பிரகாஷ் பதிலளித்துள்ளார்.


gv prakash latest speech viral

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் நடிகர் என பன்முக திறமை கொண்டவர் ஜி.வி பிரகாஷ். இவர் பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு அழகான ஒரு மகள் இருக்கும் நிலையில் 10 வருடங்களுக்கு மேலாக வாழ்ந்த வாழ்க்கை விவாகரத்தில் முடிந்ததாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.

இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது என்றே சொல்லலாம் இருந்தாலும் ஜிவி பிரகாஷ் வெளிநாடுகளில் நடத்தும் கச்சேரியில் சைந்தவியுடன் பாடல் பாடி வருகிறார்.

இதனால் பலரும் விவாகரத்தான பிறகும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதை ஆச்சரியமாக இருப்பதாகவும் சொல்லி வரும் நிலையில் இதற்கு ஜிவி பிரகாஷ் பதில் அளித்துள்ளார்.

அதில் நாங்க ரொம்ப ப்ரொபஷனல் ஒருவருக்கொருவர் மீது மரியாதை இருப்பதால் அந்த மரியாதைக்காகத்தான் ஒன்றாக பணியாற்றுகிறோம் என்று கூறியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


gv prakash latest speech viral

 

GV Prakashgv prakash latest speech virallatestspeech viralஇசையமைப்பாளர்சைந்தவிஜி.வி பிரகாஷ்