கௌதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ எப்போது ரிலீஸ்?

கோடைவெயிலில் துருவ நட்சத்திரம் பார்க்கலாம் என கௌதம் மேனன் தெரிவித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017-ம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டது.

பைனான்ஸ் பிரச்சினை காரணமாக அப்படம் 8 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடைக்கிறது. தற்போது அப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனை இயக்குனர் கெளதம் மேனன் உறுதிப்படுத்தி உள்ளார்.

அவ்வகையில், ‘துருவ நட்சத்திரம்’ படம் வருகிற கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இத்தனை ஆண்டுகள் கழித்து ரிலீஸ் ஆக உள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் மதகஜராஜாவை போல் மாபெரும் வெற்றியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ரித்து வர்மா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் டிடி, ராதிகா சரத்குமார், விநாயகன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்து, கதையில் திருப்தி இல்லாததால் நடிக்க மறுத்துவிட்டார். பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திடம் இந்த கதை சென்றது. அவரும் நடிப்பதாக இருந்து, பின்னர் மறுத்திருக்கிறார். கடைசியாக விக்ரம் கதை கேட்டதும் பிடித்ததால் ஷீட்டிங் தொடங்கி, நிறைவு பெற்றிருக்கிறது.

ஆதலால், வரும் கோடை வெயிலில் திரைவானில் பார்க்கலாம் துருவ நட்சத்திரத்தை.!

actor suriyaActor Vikramdirector gautham menonஐஸ்வர்யா ராஜேஷ்துருவ நட்சத்திரம் திரைப்படம்