துல்கரின் ஏஓடி படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (AOT) திரைப்படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ வெளியாகியுள்ளது.

ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்பாடல், திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இனிமையான மெலடியாக உருவாகியுள்ளது. கதாநாயகியின் பார்வையில் இடம்பெறும் இந்தப் பாடல், நட்சத்திரங்களைத் தொட வேண்டும் என்ற அவரது கனவையும், அந்தக் கனவை நோக்கி அவரை முன்னேறச் செய்யும் ஒரு ஆணின் அமைதியான ஊக்கத்தையும் அழகாகப் பதிவு செய்கிறது.

வழக்கமான காதல் வரையறைகளைக் கடந்து, இரு மனங்களுக்கு இடையே உருவாகும் தனித்துவமான பிணைப்பை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் வகையில் பாடல் அமைந்துள்ளது. பாலாஜி வேணுகோபால் எழுதியுள்ள பாடல் வரிகளுக்கு பின்னணி பாடகி ரம்யா பெஹாரா குரல் கொடுத்துள்ளார்.

- Advertisement -

விடாமுயற்சி, நம்பிக்கை மற்றும் கனவுகளை நோக்கி தொடர்ந்து பயணிக்கச் செய்யும் அமைதியான உந்துதல் ஆகியவற்றை கவித்துவமான வரிகள் மூலம் ‘மிட்டாய் மழை’ பாடல் உணர்த்துகிறது.

துல்கர் சல்மான், சாத்விகா வீரவள்ளி மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஆகாசம்லோ ஒக தாரா’ திரைப்படத்தை பவன் சடினேனி இயக்கியுள்ளார்.

லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஸ்வப்னா சினிமா மற்றும் கீதா ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன.

Aakasamlo Oka TaraAOTDulquer SalmaanDulquer Salmaan’s AOT First Song ReleasedSatvika VeeravalliShruti Haasan