சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் நிர்வாகிகள் சந்திப்பு.. ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

 

சென்னையில் நடைபெற்ற சிவகார்த்திகேயன் நற்பணி இயக்க நிர்வாகிகள் கூட்டம்.. 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில், அனைத்து மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் உட்பட 2000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

- Advertisement -

நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயன், ரசிகர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படங்களும் எடுத்துக்கொண்டார்.

மேலும், அறிவுத் திறன் மற்றும் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்வில் புத்தகக் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல் புத்தகத்தை நடிகர் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, ஏராளமானோர் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கலந்துகொண்ட அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. இந்தக் கூட்டம் ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

SivakarthikeyanSivakarthikeyan Narpani Iyakkam Office-Bearers Meet