தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நடிகர் சிபிராஜ்!

‘எண்ணிக்கையை விட தரமே முக்கியம்’ என்ற கொள்கையுடன், வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகர் சிபிராஜ். திரையரங்கம் மற்றும் ஓடிடி என இரு தளங்களிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது தயாரிப்பாளராகவும் புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

தனது பிறந்தநாளான இன்று, ‘அண்டர்டாக் ஃபிலிம்ஸ்’ (Underdog Films) என்ற புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சிபிராஜ் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளார்.

- Advertisement -

இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகும் ‘புரொடக்ஷன் நம்பர் 1’ படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான ‘ஜீப்ரா’ படத்தை இயக்கிய ஈஷ்வர் கார்த்திக் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தில் சிபிராஜே கதாநாயகனாக நடிப்பதுடன், படத்தையும் தயாரித்து வருகிறார். இதன் மூலம் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் என திரைப்பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

சிபிராஜ் – ஈஷ்வர் கார்த்திக் கூட்டணியில் உருவாகும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படத்தின் கதை, ஜானர், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த தகவல்கள் தற்போது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. படக்குழுவினர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Actor SibirajActor Sibiraj Launches His Own Production Company