Browsing tag

Shruti Haasan

நடிகர் துல்கர் சல்மானின் ஏஒடி படத்தின் டீசர்!

நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏஒடி (AOT)’ திரைப்படம், அவரது பான் இந்திய ரசிகர் வட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் படைப்பாக உருவாகி வருகிறது. தனித்துவமான கதை சொல்லும் பாணிக்குப் பெயர் பெற்ற இயக்குநர் பவன் சாதினேனி இப்படத்தை இயக்கியுள்ளார். கீதா ஆர்ட்ஸ் (Geetha Arts) மற்றும் ஸ்வப்னா சினிமா (Swapna Cinema) வழங்கும் இப்படத்தை, லைட்பாக்ஸ் மீடியா (Lightbox Media) சார்பில் சந்தீப் குன்னம் மற்றும் ரம்யா குன்னம் ஆகியோர் தயாரித்துள்ளனர். இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் […]

கமல்ஹாசன் மகளாக இருந்தும்…! – ஸ்ருதி ஹாசன் சொன்ன சுவாரஸ்ய தகவல்

தனது ஆரம்பகால திரைப்பயணம் குறித்து பேசியுள்ள நடிகை ஸ்ருதி ஹாசன், ஆரம்பத்தில் கேமராவுக்கு பின்னால் பணியாற்றவும், கதைகள் எழுதவும் தான் விரும்பியதாக தெரிவித்துள்ளார். தனது தாயாருடன் ஆடை வடிவமைப்புத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, தந்தை கமல்ஹாசன் நடித்த ‘ஹேராம்’ படத்தில் பணியாற்றும் வாய்ப்பு தற்செயலாக கிடைத்ததாகவும், அந்தப் படத்தின் முதல் காட்சிக்கான உடையை தானே வடிவமைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், “என் பெற்றோர் இருவரும் மிகவும் கண்டிப்பானவர்கள். அவர்களுடன் இணைந்து பணியாற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. […]

AI மூலம் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துவதற்கு எதிரான ஸ்ருதி ஹாசனின் சட்டப்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், ஒருவரின் முகம், குரல் மற்றும் தோற்றத்தை மிகத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் வகையில் போலி உள்ளடக்கங்களை உருவாக்குவது எளிதாகியுள்ளது. இதனால் தனிநபர்களின் டிஜிட்டல் அடையாளம் மற்றும் அவர்களின் சம்மதத்தைப் பாதுகாப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சூழலில், தனது அனுமதியின்றி AI மூலம் உருவாக்கப்பட்ட டீப்ஃபேக், உருமாற்றப்பட்ட புகைப்படங்கள் மற்றும் போலியாகத் தொகுக்கப்பட்ட வீடியோக்களில் தனது அடையாளம் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன் சட்டரீதியான நடவடிக்கையை […]

துல்கரின் ஏஓடி படத்தின் முதல் பாடல் வெளியீடு

நடிகர் துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஆகாசம்லோ ஒக தாரா’ (AOT) திரைப்படத்தின் முதல் பாடலான ‘மிட்டாய் மழை’ வெளியாகியுள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்பாடல், திரைப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ள இனிமையான மெலடியாக உருவாகியுள்ளது. கதாநாயகியின் பார்வையில் இடம்பெறும் இந்தப் பாடல், நட்சத்திரங்களைத் தொட வேண்டும் என்ற அவரது கனவையும், அந்தக் கனவை நோக்கி அவரை முன்னேறச் செய்யும் ஒரு ஆணின் அமைதியான ஊக்கத்தையும் அழகாகப் பதிவு செய்கிறது. வழக்கமான காதல் […]

“கடினமான நாட்களும் நம்மை வளர்க்கும் பாடங்கள்தான்” – ஸ்ருதிஹாசன் பேச்சு

முன்னணி நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன், சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற ரக்பி பிரீமியர் லீக் (Rugby Premier League) இரண்டாவது சீசன் நிகழ்வில் பங்கேற்று ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தேசிய கீதம், ரக்பி பிரீமியர் லீக் கீதம் மற்றும் தனது பிரபலமான ‘சஞ்சாரி’ பாடலை பாடி நிகழ்வை மேலும் சிறப்பித்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய ஸ்ருதிஹாசன், விளையாட்டு, ஆர்வம் மற்றும் விடாமுயற்சியின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டார். “ரக்பி பிரீமியர் லீக் போன்ற ஒரு பெரிய […]

நடிகை ஸ்ருதிஹாசன் பாடிய “பவழ மல்லி” – சாய் அபயங்கர் உருவாக்கத்தில், கலாச்சாரமும் நவீன இசையும் கலந்த இசை அனுபவம்!!

நடிகை ஸ்ருதிஹாசனின் நடிப்புக்கு மட்டுமல்ல, அவரது இசைத்திறமைக்கும் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. தற்போதைய இளைஞர்கள் பெரிதும் கொண்டாடும் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் இணைந்து அவர் பாடியுள்ள “பவழ மல்லி” பாடல் தற்போது இசை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “பவழ மல்லி” பாடல் பாரம்பரியத்தின் மணமும், நவீன இசையின் அதிரடியும் ஒன்றாக கலந்த தனித்துவமான இசை அனுபவமாக உருவாகியுள்ளது. இண்டி இசை உலகில் தனித்துவமான பாணிக்காக அறியப்படும் சாய் அபயங்கர் இந்த பாடலுக்கு இசைமைத்துள்ளார். இந்த […]

ஸ்கிராட்ச் இசை தான் ‘பவழ மல்லி’ சான்ஸ் வாங்கிக்‌ கொடுத்தது – சாய் அபயங்கர்..

திங்க் இண்டீ – யின் ‘பவழ மல்லி’ பாடல் வெளியீடு… திங்க் மியூசிக் தயாரிப்பில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து, அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இண்டீ பாடல் ‘பவழ மல்லி’ சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. சாய் அப்யங்கர் மற்றும் ஸ்ருதி ஹாசன் இணைந்து பாடிய இந்தப் பாடல், வளர்ந்து வரும் இன்டிபென்டென்ட் இசை உலகத்திற்கு மற்றொரு உயிரோட்டமான சேர்க்கையாக அமைந்துள்ளது. அதன் தனித்துவமான இசை ரசனை மற்றும் காட்சி அமைப்புகளால் ஏற்கனவே கவனத்தை […]