‘காடுகளின் பின்னணியில்’ ராஜமௌலியின் அடுத்த திரைப்படம்: பயிற்சியில் மகேஷ்பாபு

இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜமௌலி.

‘பாகுபலி’ மற்றும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படங்களுக்கு பிறகு இவர் அடுத்த படத்துக்கு உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. இப்படத்தின் பணிகளை கடந்த சில மாதங்களாக கவனித்து வருகிறார் ராஜமவுலி.

முழுக்க காடுகளை பின்புலமாக கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கி இருக்கிறார்.

இதில் நாயகனாக மகேஷ் பாபு, நாயகியாக பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இவர்கள் இருவருக்கும் ஹைதராபாத்தில் கதை விவரிப்பு, பயிற்சி உள்ளிட்ட பணிகள் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. இப்பணிகளுக்கு இடையே, கையில் மகேஷ் பாபுவின் பாஸ்போர்ட் உடன் ராஜமவுலி வெளியிட்ட வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பதிவுக்கு மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா இருவருமே கமெண்ட் செய்திருக்கிறார்கள். இதன் மூலம் பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதியாகிவிட்டது. விரைவில் படக்குழுவினர் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் முதல் பாகம் 2026-ம் ஆண்டு இறுதியில் வெளியாகும் என தெரிகிறது. அவ்வகையில், இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பும் சேர்த்தே எடுக்கப்பட்டு, எடிட்டிங்கில் பிரிக்கப்படலாம் என தெரிகிறது.

காடுகளை கதைக்களமாக கொண்டு திரைக்கதை உருவாக்கப்படுவதால், படப்பிடிப்பு தளங்களுக்கு தேவையான பாதுகாப்பும் மிக அவசியமாகிறது. அந்த பணிகளையும் படக்கதையோடு படுகவனமாய் செய்து வருகிறது படக்குழு.

actor mahesh babudirector rajamouliPriyanka Chopraஆர்.ஆர்.ஆர்பாகுபலி