தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தனுஷின் ‘D56’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மதுரையில் இன்று பூஜையுடன் தொடங்கியது. ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த எழுத்தாளர்–இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார்.
“பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற சுவாரஸ்யமான அறிவிப்புடன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தனுஷுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடிக்கிறார். வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா, விஜய் பி. குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மதுரையில் நடைபெற்ற பூஜையைத் தொடர்ந்து, படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. மதுரையை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களமும் காட்சியுலகமும் படமாக்கப்படவுள்ளது.
இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். தனுஷ் நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ்–சாய் அபயங்கர் இணையும் இரண்டாவது படம் இதுவாகும்.
- Advertisement -
சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் மற்றும் ப்ரிமார்க் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை நாக வம்சி, சாய் சௌஜன்யா மற்றும் எஸ். ஹரிதா லிங்கசாமி ஆகியோர் தயாரிக்கின்றனர்.
சமீபத்தில் வெளியான ‘D56’ அறிவிப்பு போஸ்டரில் இடம்பெற்றிருந்த பிரம்மாண்டமான பாரம்பரிய கதவு மற்றும் தனுஷின் கதாபாத்திர வடிவமைப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, “பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு” என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.
தனுஷ், வடிவேலு, எஸ்.ஜே. சூர்யா கூட்டணி, தமிழரசன் பச்சமுத்துவின் இயக்கம் மற்றும் சாய் அபயங்கரின் இசை என பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாகும் ‘D56’ திரைப்படம் 2027-ம் ஆண்டு கோடை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
பாரி வேட்டைக்கு பந்தக்கால் நட்டாச்சு 💥#D56 on floors Today 🎬 Summer 2027 release.@dhanushkraja #Vadivelu @iam_SJSuryah @Vijay_B_Kumar @PreityMukundan @tamizh018 @SaiAbhyankkar #SrikaraStudios @SitharaEnts @PrimarkProd @vamsi84 #SaiSoujanya @lingasamy21 pic.twitter.com/Xvv6x76Jzh
— Sithara Entertainments (@SitharaEnts) September 25, 2026