28-ந்தேதி ரிலீஸாகும் தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’: டிரெய்லர் எப்படி?

பன்முகத்திறமை கொண்ட நடிகராக தன்னை வளர்த்துக் கொண்டவர் தனுஷ். இவர், கோலிவுட்டை கடந்து பாலிவுட்டிலும் தடம் பதித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

அவ்வகையில் ‘ராஞ்சனா’ படத்தை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் ‘தேரே இஸ்க் மெய்ன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் சங்கர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வருகிறார். நாயகியான கீர்த்தி சனோன், முக்தி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தி, தமிழில் உருவாகியுள்ள இப்படம் வருகிற 28-ந்தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது.

‘ராஞ்சனா’ படத்தின் 2-ம் பாகம் என விளம்பரம் செய்யப்பட்டாலும் டிரெய்லரில் அப்படி தெரியவில்லை. விமானப் படை அதிகாரியாக வரும் தனுஷுக்கும் கீர்த்திக்கும் இடையிலான கடந்த காலத்து காதலும், கருத்து வேறுபாடுகளால் தற்போதைய மோதலுமே படத்தின் கதைக்களம் என்பதுபோல சித்தரிக்கப்பட்டு உள்ளது.

டிரெய்லரின் ஒவ்வொரு காட்சியிலும் தனுஷின் ஃபெர்பாமென்ஸ் அருமை. 100 சதவீத காதல் கதையாக உருவாகியுள்ளது. கீர்த்தி சனோனுக்கு சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ரகுமானின் பின்னணி இசையில் காதலின் ஏக்கமும் கோபமும் வலியும் மகிழ்ச்சியும் உணர முடிகிறது. டிரெய்லரில் அடிக்கடி தனுஷும் கீர்த்தியும் சிகரெட்-மதுவுடன் வருகிறார்கள். இப்படம் ரசிகர்களை ஈர்க்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

dhanush in tere ishk mein movie trailer
actor dhanushLove StoryTere Ishk Meinகீர்த்தி சனோன்தனுஷ்