தனுஷின் ‘மறக்க முடியாத நினைவலைகள்’: வைரலாகும் நிகழ்வு..

பன்முகத்திறமையாளர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. நாயகியாக நித்யா மேனன் நடித்துள்ளார். அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்.

இந்நிலையில் முன்னதாக, நடிகர் நாசர் இயக்குநராக அறிமுகமான படம் அவதாரம். 1995-ம் ஆண்டு வெளியான அந்த படத்தில் நாசருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரேவதி. இளையராஜா இசையமைத்திருந்தார்.

அந்த படத்தில் வந்த ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை ஜானகியுடன் சேர்ந்து பாடினார் இளையராஜா. இளையராஜா, ஜானகி பாடிய அந்த பாடல் இன்றும் பிரபலம். இந்நிலையில், அது தொடர்பான தனுஷின் வீடியோ வெளியாகியுள்ளது.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் தான் நடித்த ‘அனேகன்’ படத்தை படக்குழுவினருடன் சேர்ந்து விளம்பரம் செய்ய சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தனுஷ். அந்த நிகழ்ச்சியில், சிறுமி ஒருவருடன் சேர்ந்து, ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடலை மிகவும் அழகாக பாடினார்.

அந்த வீடியோவை தான் தற்போது வலைதளங்களில் ஷேர் செய்கிறார்கள். தனுஷ் அப்பவே இவ்வளவு அழகாக அதுவும் இளையராஜா குரலிலேயே பாடியது தான் ஹைலைட்டே.

‘ரோஜா ரோஜா’ பாடலை அடுத்து இந்த பாட்டை ரசிகர்கள் ரிப்பீட் மோடில் கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதாவது, சத்யன் மகாலிங்கம் 26 ஆண்டுகளுக்கு முன்பு இசை நிகழ்ச்சி ஒன்றில் தன் வருங்கால மனைவியுடன் சேர்ந்து காதலர் தினம் படத்தில் வந்த ‘ரோஜா ரோஜா’ பாடலை மிக மிக அழகாக பாடியிருந்தார். அந்த பழைய வீடியோ தற்போது வைரலாகி பலரும் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.

dhanush 10year old video is something you should not miss
actor dhanushIlaiyaraajaMusicஇட்லி கடைஇளையராஜா