Browsing category

Latest News

துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படம் ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர் துருவ் விக்ரம் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ஜாக்கி – நோ ரீடேக்ஸ் அலவுட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி பான் இந்தியா தயாரிப்பு நிறுவனமாகத் திகழும் மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழ் சினிமாவில் தனது நான்காவது படைப்பாக இப்படத்தை தயாரிக்கிறது. நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், […]

25 ஆண்டுகளுக்குப் பிறகு சவாலான கதாபாத்திரம் – கருணாஸின் என்ன விலை!

தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நடிகர் கருணாஸ், தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களிலும் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில், தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராமேஸ்வரம் அருகே கடலில் பக்தர்கள் காணிக்கையாக வீசும் நாணயங்களை மீட்டெடுத்து வாழும் தவசிமுத்து என்ற நாணய மீட்பாளராக கருணாஸ் நடித்துள்ளார். வாழ்வாதாரம், கண்ணியம் மற்றும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கான உரிமை ஆகியவற்றை மையமாகக் கொண்ட இப்படம், […]

போலீஸ், விசாரணை என வழக்கமான கதை இல்லை… ‘தி டார்க் ஹெவன்’ குறித்து ரித்விகா!

நாட்டார் கதையை மையமாகக் கொண்டு முழுநீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தை ‘D3’ படத்தை இயக்கிய பாலாஜி இயக்கியுள்ளார். பிக்பாஸ் புகழ் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். மணிகண்டன் பிகே ஒளிப்பதிவு செய்ய, ராஜா ஆறுமுகம் படத்தொகுப்பு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசையமைத்துள்ள இப்படத்திற்கு லாவர்தன் […]

TIFF திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட கார்த்திக் சுப்பராஜின் ‘டோரதி’!

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம், 2026 டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் (TIFF) உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது. TIFF-ன் பிரபலமான ‘சென்டர்பீஸ்’ பிரிவில் திரையிடப்பட்ட இப்படத்திற்கு பார்வையாளர்கள் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர். கடந்த பத்தாண்டுகளில் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்படும் முதல் இந்தியத் தமிழ் திரைப்படம் என்ற பெருமையையும் ‘டோரதி’ பெற்றுள்ளது. இதன் மூலம் கார்த்திக் சுப்புராஜின் படைப்பு […]

துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு அப்டேட்

துருவ் விக்ரமின் அடுத்த படமாக புதிய தமிழ்–தெலுங்கு இருமொழி ஆக்‌ஷன் திரைப்படம் உருவாகிறது. தெலுங்கில் ‘ராட்சசன்’, ‘கில்லாடி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரமேஷ் வர்மா இப்படத்தை இயக்குகிறார். இதன் மூலம் துருவ் விக்ரம் – ரமேஷ் வர்மா கூட்டணி முதல் முறையாக இணைகிறது. பென் ஜெயந்திலால் வழங்கும் இப்படத்தை பென் ஸ்டுடியோஸ், ஸ்ரீ நீலாத்ரி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஆர்.வி. ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. கோனேரு சத்யநாராயணா மற்றும் சிரீஷா குரபதி தயாரிப்புப் பணிகளை மேற்கொள்கின்றனர். ஆக்‌ஷனுக்கு […]

நாகராஜ் நம்மை ஏமாற்ற மாட்டார் – ஆகாயம் விழாவில் சசி நம்பிக்கை!

டெல்டா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் ஜெயச்சந்திரன் மற்றும் கார்த்திகா தேவி தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘ஆகாயம்’. இப்படத்தை இயக்குநர் தினந்தோறும் நாகராஜ் கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் இயக்குநராக களமிறங்கும் திரைப்படமாக ‘ஆகாயம்’ உருவாகியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, சசி, சேரன், இயக்குநரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் டி.சிவா, இயக்குநர்கள் சற்குணம், பாலசேகர், கிருஷ்ணா […]

அன்பில் அவன் படத்தின் இரண்டாவது சிங்கிள் “கல்லா நிக்கிறியே” வெளியானது!

அசோக் செல்வன் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான “கல்லா நிக்கிறியே” பாடல் வெளியாகியுள்ளது. கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ள இப்பாடலுக்கு கார்த்திக் நேத்தா வரிகள் எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ள “கல்லா நிக்கிறியே” பாடல், காதலின் வலி, பிரிவின் ஏக்கம் மற்றும் காதலியின் மீதான பெருமை உள்ளிட்ட உணர்வுகளை மையமாகக் கொண்ட மெலடியாக அமைந்துள்ளது. படத்தின் முதல் சிங்கிளான “ஆசை வரமே” காதலின் இனிமையான தருணங்களை பதிவு செய்திருந்த நிலையில், […]

தி பாரடைஸ் படத்துக்கு டிரைலர் கிடையாது – நடிகர் நானி

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில், ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீடு குறித்து பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் படக்குழுவினர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினர். தயாரிப்பாளர் சுதாகர் செறுகுரி பேசுகையில், “படம் குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால், திட்டமிட்டபடி செப்டம்பர் 24-ஆம் தேதி படம் வெளியாகும். படத்தின் இறுதி வடிவம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது” […]

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். தற்போது அவர் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து Variety India-க்கு அளித்த பேட்டியில் பேசிய ஜிதின் குலாட்டி, பிரபாஸின் எளிமை மற்றும் மனிதநேயத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார். “பிரபாஸ் மிகவும் இனிமையானவர், தாராளமானவர். யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவத் தயாராக […]

பிக் பாஸ் தமிழ் 10-ல் அதிரடி திருப்பம்! எவிக்ஷன் முடிவு போட்டியாளர்கள் கையில்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத புதிய திருப்பமாக, இந்த வார எவிக்ஷன் முடிவு சக போட்டியாளர்களின் கைகளுக்கு சென்றுள்ளது. அதாவது, நாமினேட் செய்யப்பட்டுள்ள போட்டியாளர்களில் யார் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்பதை போட்டியாளர்களே முடிவு செய்ய உள்ளனர். இந்த வார எவிக்ஷனுக்காக கேப்டன் வினோத் பாபுவால் தன்யா பல்லத், முனியம்மாள் மற்றும் சவின்யா ஆகிய மூவரும் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர். வழக்கமாக பார்வையாளர்களின் வாக்குகளின் அடிப்படையில் எவிக்ஷன் நடைபெறும் நிலையில், இந்த […]