Browsing category

Latest News

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான ஆழமான அன்பையும் பிரிக்க முடியாத பாசப் […]

ஏகன் ஒரு கருப்பு வைரம் – இயக்குநர் பொன்ராம் புகழாரம்!

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹைக்கூ’. ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் அக்டோபர் 23-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், […]

விஜய் மில்டனின் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’ படத்தின் முதல் பாடல் ‘நந்தினி’ வெளியீடு!

இயக்குநர் விஜய் மில்டன் இயக்கத்தில், ரஃப் நோட் புரொடக்‌ஷன் (Rough Note Production) தயாரிப்பில் உருவாகி வரும் தமிழ் – தெலுங்கு இருமொழித் திரைப்படம் ‘தொண்டர் படை – Chapter 1: Gods and Soldiers’. இப்படத்தின் முதல் பாடலான ‘நந்தினி’ (Nandhini), சவேதா கல்விக் குழுமத்தில் 5000 மாணவர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. இன்றைய இளைஞர்களிடையே பிரபலமாக இருக்கும் ராப் இசைக் கலைஞர் பால் டப்பா இப்படத்தில் முக்கியப் பங்கு வகிப்பதோடு, ‘நந்தினி’ பாடலுக்கு இசையமைத்து, […]

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ உடன் வெளியாகும் ‘டிரோன்ஸ்’ – சித்தி இத்னானி நெகிழ்ச்சி

GM Morgan Films தயாரிப்பில், ஆர். ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டிரோன்ஸ்’. சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி, சினிமாவாலா சதீஷ், சசி செல்வராஜ், ஆர்.ஜே. தீபக் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம், ஹாரர், ஃபேண்டஸி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் வித்தியாசமான படைப்பாக உருவாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் ஜி.எம். மோர்கன், […]

ஆர்யாவின் 40-வது படத்திற்கு ஹலோ காதல் எனத் தலைப்பு?

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 40-வது திரைப்படத்திற்கு ‘ஹலோ காதல்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் நிகில் முரளி இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தை, ஆர்யா தனது ‘தி ஷோ பீப்பிள்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ஆர்யாவின் 40-வது படமாக […]

முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்த குஷ்பு… என்ன கோரிக்கை தெரியுமா?

சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்கு எனத் தனி இடம் ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “சின்னத்திரையில் நடிப்பவர்களுக்கும், பணியாற்றுபவர்களுக்கும் சம்பள உயர்வு வழங்க வேண்டிய சூழல் உள்ளது. ஆனால், தயாரிப்பாளர்களுக்குச் சேனல்களிடமிருந்து அதற்கேற்ற சம்பள உயர்வு கிடைப்பதில்லை” என்று தெரிவித்தார். மேலும், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தனி இடம் வேண்டும் என முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்ததாகவும், அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகக் […]

75 நாட்களில் உருவான அமெரிக்க ஆவி… நெப்போலியன் பகிர்ந்த சுவாரசிய தகவல்!

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே.பி.ஆர் இயக்கத்தில் நடிகர் நெப்போலியன் நடித்துள்ள திரைப்படம் ‘அமெரிக்க ஆவி’. காமெடி ஹாரர் திரில்லர் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதர் டாக்கா ஹாசி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வில் […]

இறுதிப்பக்கம் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

‘இறுதிப்பக்கம்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமாக உருவாகியுள்ள ‘இறுதிப்பக்கம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. Insomniac’s Dream Creations நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் மனோ வெ கண்ணதாசன் இயக்கியுள்ளார். முதல் பாகத்தில் மர்மம், விசாரணை மற்றும் உணர்வுபூர்வமான திருப்பங்களுடன் கூடிய திரில்லர் கதையை வழங்கிய இயக்குநர் மனோ வெ கண்ணதாசன், இந்தப் பாகத்திலும் விறுவிறுப்பான மர்மத் திரில்லர் கதைக்களத்தைக் கையிலெடுத்துள்ளார். இளம் நடிகர் மணிகண்டன் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை […]

அட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது வென்ற என்ன விலை

நடிகர்கள் கருணாஸ், நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அட்லாண்டா இந்தியத் திரைப்பட விழாவில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை வென்றுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 3ஆம் தேதி நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில், ஆல்பி ஆண்டனி சார்பில் படத்தின் தயாரிப்பாளர் அனுகோபால் வேணுகோபாலன் விருதைப் பெற்றுக்கொண்டார். தேசிய விருது பெற்ற இயக்குநர் சஜீவ் பாழூர் இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படத்தில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட […]

என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக வெற்றி.. பரீட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய ஹாரூண் இப்படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் வெற்றி, இப்படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் போலீஸ் அதிகாரியாக கதாநாயகனாக நடித்துள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த அக்சிதா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சாந்தினி தமிழரசன், பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, ‘லப்பர் பந்து’ புகழ் ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு […]