அர்ஜுன் தாஸின் ‘ஜான் டோ’ படத்தில் வெளியீட்டு தேதி அறிவிப்பு

நடிகர் அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படமான ‘ஜான் டோ’ (John Doe), வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் புதிய போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சிவப்பு மற்றும் கருப்பு வண்ணப் பின்னணியில் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டரில், காவல்துறை அதிகாரி சீருடையில் அர்ஜுன் தாஸ் இடம்பெற்றுள்ளார். அவரைச் சுற்றிலும் பல்வேறு கதாபாத்திரங்களின் புகைப்படங்கள், மர்மமான காட்சிகள் மற்றும் விசாரணைக்குத் தொடர்புடைய தடயங்கள் இடம்பெற்றுள்ளன. இவை படத்தின் கிரைம் திரில்லர் கதைக்களம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட திரைப்படங்களைத் தயாரித்த அர்கா மீடியாஒர்க்ஸ் (Arka Mediaworks) நிறுவனம் சார்பில் ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனி இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இயக்குநர் மதுமிதா இப்படத்தை இயக்கியுள்ளார்.

- Advertisement -

அர்ஜுன் தாஸ் கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சஞ்சனா நடராஜன், ஸ்ருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை இயக்குநர் மதுமிதா மற்றும் நிக்கோலஸ் செவாலியர் இணைந்து எழுதியுள்ளனர்.

படத்திற்கு பிரீதா ஜெயராமன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசையமைக்க, ஆர்டிஸ்ட் 404 கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. படத்தொகுப்பை விஜய் வெங்கடரமணனும், தயாரிப்பு வடிவமைப்பை அஷ்வினி காலேவும் கவனித்துள்ளனர்.

“ஜான் டோ என்பவர் யார்? அவர் பாதிக்கப்பட்டவரா, கொலைகாரரா அல்லது காணாமல் போன குழந்தையா? என்ற கேள்வியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது. சந்துரு உண்மையைத் தேடிப் பயணிக்கும்போது, ஜான் டோ குறித்த உண்மையை யாரும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்றால் என்ன நடக்கும்? என்ற சுவாரஸ்யமான கேள்வியுடன் திரைக்கதை பயணிக்கிறது. பார்வையாளர்களால் எளிதில் யூகிக்க முடியாத வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது” எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருப்பது, மர்மம் நிறைந்த கதைக்களம் மற்றும் அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு எனப் பல்வேறு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘ஜான் டோ’ திரைப்படம் வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Arjun DasJohn DoeRelease Date Announced for Arjun Das's John Doe