Browsing category

Latest News

தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் விஜய், திரிஷா ஒன்றாக பங்கேற்பு..

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், திரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு […]

5 இயக்குநர்கள் இயக்கியுள்ள ‘வவ்வல்ஸ்’ படத்தின் கதை என்ன?

5 இயக்குநர்கள்; 5 கதைகளுடன் ‘வவ்வல்ஸ்’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. யூகிசேது, சின்னி ஜெயந்த், சம்​யுக்தா விஸ்​வ​நாதன், ராஜ் அய்​யப்​பா, தீபக் பரமேஷ் உள்​பட பலர் நடித்​துள்ள திரைப்​படம் ‘வவ்வல்ஸ்; அன் அட்​லஸ் ஆஃப் லவ்’. 5 கதைகளைக் கொண்ட இப்​படத்தை திலிப் குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்​தோஷ் ரவி மற்​றும் ஜெகன் ராஜேந்​திரன் ஆகிய 5 இயக்​குநர்​கள் இயக்​கி​யுள்​ளனர். ராஜு ஷெரேகர் தயாரித்​துள்ள இப்​படம் வருகிற 13-ந்தேதி வெளியாகிறது. […]

செல்வராகவன் நடிக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் கதைக்களம்..

இயக்குநர் செல்வராகவன் நடிகராகவும் முத்திரை பதித்து வருகிறார். இதற்கிடையே ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘மெண்டல் மனதில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், டென்னிஸ் மன்ஜுனாத் இயக்கத்தில் ‘மனிதன் தெய்வமாகலாம்’ என்ற படத்தில் செல்வராகவன் நடிகராக இணைந்துள்ளார். விஜயா சதீஷ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் பற்றி இயக்குநர் தெரிவிக்கையில், ‘இயற்கையும் அமைதியும் சூழ்ந்துள்ள […]

கவுதம் ராம் கார்த்திக் நடித்துள்ள 19-வது படத்தின் அப்டேட்ஸ்..

மணிரத்னம் இயக்கத்தில் கவுதம் ராம் கார்த்திக் ‘கடல்’ என்ற படத்தில் நாயகனாக அறிமுகம் ஆனார். இவர், தனக்கான நிலையான இடம் பிடிக்க முயன்று வருகிறார். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. கவின், அனுபமா தாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற ‘டாடா’ படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர், தற்போது கவுதம் ராம் கார்த்திக் நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். தீனா ராகவன் எழுதி, இயக்கும் இந்தப் படம் கவுதம் ராம் […]

சிம்ரன் சொன்னதை கேட்டு ஷாக்கான சரத்குமார்: சுவாரஸ்ய நிகழ்வு..

சிம்ரனுக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைந்துவிட்டது. அஜித் குமார் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் கவுரவத் தோற்றத்தில் வந்தபோதிலும் ரசிகர்கள் சிம்ரனை கொண்டாடினார்கள். மேலும், அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மனைவியாக சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் கடந்த ஆண்டு அதிக லாபம் ஈட்டியது. இந்நிலையில், வரலட்சுமி சரத்குமார் இயக்கி, தயாரித்து, நடித்திருக்கும் ‘சரஸ்வதி’ படம் நாளை 6-ந்தேதி நாளை ரிலீஸாகிறது. இச்சூழலில் நடந்த சரஸ்வதி பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், […]

ரைசா நடித்துள்ள ‘நோவா’ படம் பற்றி இயக்குநர் அப்டேட்ஸ்..

பான் இந்திய அளவில் பல வந்தாலும், சில நேரங்களில் சிறு பட்ஜெட் படங்கள் கவனத்தை ஈர்த்து விடுகிறது. அந்த நம்பிக்கையில் உருவாகியுள்ள ‘நோவா’ படம் பற்றிப் பார்ப்போம்.. ‘பியார் பிரேமா காதல்’ ரைசா வில்சன், ‘ஆண்மை தவறேல்’ துருவா நடிக்கும் படம், ‘நோவா: பேஸ் ஒன் – தி அரைவல்’. இந்த படத்தில் அத்விதி ஷெட்டி, பெங்காலி நடிகை கிருத்திகா பிஸ்வாஸ், ஜோ ஜான் சாக்கோ, சென்ராயன், ஃபைனலி ஸ்வாதிகா, கிருஷ்ணா என பலர் நடித்துள்ளனர். ஆதி, […]

நாளை ரிலீஸாகும் ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் கதைக்களம்..

நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகியுள்ள ‘முஸ்தபா முஸ்தபா’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்.. சதீஷ் கதாநாயகனாக நடித்துள்ள டார்க் காமெடி படம் ‘முஸ்தபா முஸ்தபா’. இப்படத்தில் சுரேஷ் ரவி, கருணாகரன், புகழ், மோனிகா, மானசா சவுத்ரி, ஐஸ்வர்யா தத்தா, பாவல் நவநீதன் என பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் பிரவீன் சரவணன் இயக்கியுள்ளார். நாளை 6-ந்தேதி ரிலீஸாகும் இப்படம் பற்றி நடிகர் சதீஷ் கூறும்போது, ‘இது ஜாலியான படமாக இருக்கும். ‘முஸ்தபா முஸ்தபா’ என்றால் நமக்கு நட்பு பாடல் […]

டாக்சிக் மற்றும் ஜனநாயகன் ரிலீஸ் தேதி: விஜய் ரசிகர்கள் கேள்வி..

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாக்சிக்’ படம் மார்ச் 19-ந்தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார்கள். யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘டாக்சிக்’ படத்தை விஜய்யின் ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். ப்ரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இந்நிலையில் டாக்சிக் பட ரிலீஸை தள்ளிப் போட்டிருப்பதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது கே.வி.என். ப்ரொடக்சன்ஸ். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ‘உலக ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட படம் டாக்சிக். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் டாக்சிக் படம் […]

‘காதல் கல்யாணம்’ பற்றி ஐஸ்வர்யா லட்சுமி விளக்கம்..

ஜெகமே தந்திரம், கட்டா குஸ்தி, கேப்டன், பொன்னியின் செல்வன், மாமன், போன்ற படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா லட்சுமி தற்போது விஷ்ணு விஷால் ஜோடியாக ”கட்டா குஸ்தி-2′ படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு. மலையாளத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா லட்சுமியிடம், ‘காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்று கேட்கப்பட்டது. அதற்கு, ‘காதல் என்றாலே சிக்கல்தான். நாம் வேண்டும் என்று நினைக்கும்போது, தானாக வரும் விஷயம்தான் காதல்’ என பதிலளித்தார். அதன்பின்னர் ‘நீங்கள் […]

மாணவர்களுக்கு விஜய் தேவரகொண்டா கல்வி உதவித்தொகை..

விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் கடந்த பிப்ரவரி 26-ந்தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் திருமணம் செய்துகொண்டனர். இதில் அவர்களின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்துகொண்டனர். ஹைதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் இன்று வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஏராளமான திரை பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். திருமணத்தை முன்னிட்டு இந்தியா முழுவதும் பல கோயில்களில் இந்த ஜோடி அன்னதானம் வழங்கினர். இதையடுத்து விஜய் தேவரகொண்டா, காதல் மனைவி ராஷ்மிகாவுடன் தெலங்கானா மாநிலம் நாகர்குர்னூல் மாவட்டத்தில் உள்ள தனது […]