Browsing category

Latest News

காஜல் அகர்வால் நடித்த தி இந்தியா ஸ்டோரி டிரைலர் வெளியீடு!

காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி: ஸ்லோ பாய்சன் இன் ப்ரோக்ரஸ்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது. பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படும் விவசாயம் மற்றும் அதன் விளைவாக பொதுமக்களின் உடல்நலத்தில் ஏற்படும் ஆபத்துகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் முக்கிய பிரச்சினையை திரையுலக மொழியில் பதிவு செய்கிறது. ZEE Studios வழங்க, MIG Production தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சேட்டன் டி.கே. […]

‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ வெளியீடு

ZEE Studios வழங்க, MIG Production தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ செல்’ (Nee Sel)-ஐ T-Series வெளியிட்டுள்ளது. நம்பிக்கை, விடாமுயற்சி மற்றும் தளராத மன உறுதியை மையமாகக் கொண்ட இந்த பாடல், படத்தின் உணர்வுபூர்வமான கருவை வெளிப்படுத்தும் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. பாடகி ரிச்சா ஷர்மா உணர்வுபூர்வமாகப் பாடியுள்ள இந்த பாடலுக்கு மங்கேஷ் தகாடே இசையமைத்துள்ளார். ஷகீல் அசாமி எழுதிய வரிகள், வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்டு முன்னேற வேண்டும் […]

சிறந்த இசை அமைப்பாளராக சாம் சி.எஸ் தேர்வு

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம் சி எஸ் தனது இசைப் பயணத்தில் மேலும் ஒரு முக்கிய சாதனையைப் பதிவு செய்துள்ளார். ‘சுழல் 2’ (Suzhal 2) வெப் தொடருக்காக ‘Best Original Soundtrack – Regional’ விருதை வென்று, தனது தனித்துவமான பின்னணி இசைக்காக தேசிய அளவில் மீண்டும் பாராட்டைப் பெற்றுள்ளார். இந்த ஆண்டின் விருதுகளில் ‘சுழல் 2’ வெப் தொடர் மொத்தம் […]

பிரம்மாண்ட ஆடி & பண்டிகை ஷாப்பிங் கொண்டாட்டம்! புதிய கலெக்ஷன்களுடன் வாடிக்கையாளர்களை வரவேற்கும் வேலவன் ஸ்டோர்ஸ்

சென்னை: பண்டிகை கால ஷாப்பிங்கை முன்னிட்டு, சென்னை டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸ், புத்தம் புதிய கலெக்ஷன்கள், அதிரடி சலுகைகள் மற்றும் குடும்பம் முழுவதற்குமான ஆடைத் தொகுப்புகளுடன் வாடிக்கையாளர்களை வரவேற்று வருகிறது. பிரசாந்த் டவர்ஸ் அருகே புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாலத்தில் இறங்கியவுடன் இடது புறத்தில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸ், டூ வீலர் மற்றும் ஃபோர் வீலர் வாகனங்களுக்கு போதுமான பார்க்கிங் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. ரயில் மற்றும் பேருந்தில் வருபவர்களும் எளிதாக நடந்தே […]

அனிருத்துடன் இணைந்த வேடன்

இசைப் பயணத்தில் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளதாக பாடகர் வேடன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். முதல் முறையாக இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உடன் இணைந்து பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். வரவிருக்கும் ‘DC’ திரைப்படத்திற்காக சமீபத்தில் சென்னை நகரில் பாடல் பதிவு நடைபெற்றதாகவும், அந்த அனுபவம் தனது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக அமைந்ததாகவும் வேடன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “முதல் முறையாக ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் சாருடன் இணைந்து ஒரு பாடல் […]

ஜி.டி.என் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜி.டி.என்.’ (GTN) திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த கண்டுபிடிப்பாளரும் தொழில்துறை முன்னோடியுமான ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், தற்போது வெளியாகும் முன்பே புதிய சாதனையைப் படைத்துள்ளது. சமீபத்தில் கோயம்புத்தூரில் உள்ள கரி மோட்டார் ஸ்பீட்வேயில் நடைபெற்ற பிரம்மாண்ட டிரெய்லர் வெளியீட்டு விழாவும், டிரெய்லருக்கு கிடைத்த அமோக வரவேற்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியது. இந்நிலையில், […]

நடிகர் வைபவ் நடிக்கும் ‘மாறு வேஷம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகி வரும் மர்டர் மிஸ்ட்ரி த்ரில்லர் திரைப்படமான ‘மாறுவேஷம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. உலகம் முழுவதும் தனி ரசிகர் பட்டாளம் கொண்ட மர்டர் மிஸ்ட்ரி ஜானரில் உருவாகும் இந்தப் படத்தை ஒனிரோமான்சி பிக்சர்ஸ் நிறுவனம், மங்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளது. விஜய் ஆனந்த் மற்றும் நடிகர் வைபவ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ளார். குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய துப்பறியும் த்ரில்லராக உருவாகியுள்ள இந்தப் […]

“‘ஹபீபி’ மூலம் கிடைத்த அனைத்து அங்கீகாரத்திற்கும் காரணம் இயக்குநர் மீரா கதிரவன்தான்!” – இளம் நடிகர் ஈசா நெகிழ்ச்சி

‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க இளம் நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ள ஈசா, தனது வெற்றிப் பயணம், திரையுலக அனுபவம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். முதல் படத்திலேயே ரசிகர்களின் வரவேற்பு, விமர்சகர்களின் பாராட்டு மற்றும் திரையுலக பிரபலங்களின் அங்கீகாரம் ஆகியவற்றைப் பெற்றுள்ள ஈசா, அந்த வெற்றிக்கான முழுப் பெருமையையும் இயக்குநர் மீரா கதிரவனுக்கே அர்ப்பணித்துள்ளார். மதுரையிலிருந்து தமிழ் சினிமா வரை… மதுரையைச் சேர்ந்த ஈசா, சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் […]

புராணக் கதை பின்னணி​யில் ஏ.ஐ. மூலம் உரு​வான ‘அவிரா’

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பம் உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அதன் தாக்கம் தற்போது திரைப்படத் துறையிலும் தீவிரமாகப் பரவி வருகிறது. அந்த வரிசையில், முழுக்க முழுக்க Photo Realistic AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாகும் முழுநீள திரைப்படமாக ‘அவிரா’ உருவாகி வருகிறது. சுமார் 70-க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களை இயக்கியுள்ள பிரபாகரன், இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். லைட் ஹவுஸ் ஃபில்ம் கம்பெனி தயாரிக்கும் […]

‘சூர்யா 47’ படப்பிடிப்பு நிறைவு: ஜீத்து மாதவனுடன் இணையும் சூர்யாவின் ஆக்ஷன்-காமெடி அதிரடி!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 47-வது திரைப்படத்தின் (‘சூர்யா 47’) படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. மலையாளத்தில் பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘ஆவேஷம்’ திரைப்படத்தை இயக்கிய ஜீத்து மாதவன், இப்படத்தை இயக்கியுள்ளார். போலீஸ் அதிகாரியாக சூர்யா: முற்றிலும் ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த வணிகத் திரைப்படமாக உருவாகியுள்ள இதில், நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் ‘பிரேமலு’ புகழ் நஸ்லென், நஸ்ரியா, ஜான் விஜய், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூர்யா மற்றும் […]