Browsing category

Latest News

காளி வெங்கட் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் தொடக்கம்!

பி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் மற்றும் சினிமா டூர் என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படத்தின் தொடக்க விழா சென்னை நகரில் கோலாகலமாக நடைபெற்றது. தயாரிப்பாளர் சரத் பாபு மற்றும் இணை தயாரிப்பாளர் சூர்யா தேவி தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் காளி வெங்கட் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர் பா. விஜய் கார்த்திக்கேயன் இயக்கும் இந்த படம் தற்போது பெயரிடப்படாமல் தயாராகி வருகிறது. இந்த திரைப்படத்தில் காளி வெங்கட்டுடன் ரேஷ்மா […]

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியீடு

ருத்ரம் சினிமாஸ் & எஸ்.ஆர் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘சிங்கா’ படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ருத்ரம் சினிமாஸ் மற்றும் SR பிலிம்ஸ் இணையும் முதல் முயற்சியாக உருவாகும் இந்த படம், மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான உடைக்க முடியாத பாசத்தை மையமாகக் கொண்ட உணர்ச்சிப்பூர்வமான கதையாக உருவாகியுள்ளது. குடும்பம் முழுவதும் ரசிக்கக்கூடிய வகையில் இப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் ராஜ துரை சிங்கம் இயக்கத்தில் உருவாகும் இப்படம், முன்னணி இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவத்தின் […]

நாயகனாக அறிமுகமாகும் விக்கல்ஸ் விக்ரம்: ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் சுவாரஸ்யமான தொடக்கம்

சமூக வலைதளங்களில் ‘விக்கல்ஸ்’ பக்கத்தின் மூலம் பிரபலமாகி, பின்னர் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் வாயிலாக பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்ட ஸ்டாண்ட் அப் காமெடியன் விக்ரம், தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கே.சி. குரு இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்திற்கு ‘லைட் வெயிட் பேபி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஹிதா ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இந்தப் படம் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியனுக்கும், ஒரு பெண் பாடி பில்டருக்கும் இடையிலான காதலை மையமாகக் […]

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படத்தை இயக்கும் ‘ஹாய் நானா’ பட இயக்குனர்

நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் இயக்குநர் சௌர்யுவ் இணையும் புதிய திரைப்படம் #VDxSHOURYUV, ஸ்டைலிஷ் அறிவிப்பு போஸ்டருடன் ரசிகர்களுக்கு அறிமுகமாகியுள்ளது. “ஒருகாலத்தில் அன்பாக இருந்த கோபம்… இன்று கர்ஜனையாக மாறியுள்ளது” என்ற வரியுடன் தொடங்கும் இந்த அறிவிப்பு, படத்தின் தீவிர உணர்ச்சி மற்றும் வித்தியாசமான களத்தை வெளிப்படுத்துகிறது. போஸ்டரில், விஜய் தேவரகொண்டா உலோக சங்கிலிகளால் நான்கு நாய்களை கட்டுப்படுத்தியபடி, உறுதியான நடைப்பாதையில் முன்னேறும் காட்சி இடம்பெற்றுள்ளது. அவருக்கு பின்னால் பலர் அணிவகுத்து வரும் காட்சியும், இது ஒரு […]

விக்ரம் – ஆனந்த் சங்கர் மீண்டும் இணையும் ‘சீயான் 63’

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படம் “Chiyaan 63” அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். பட அறிவிப்பு ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இருமுகன் படத்தில் இணைந்து வெற்றி கண்ட இந்த கூட்டணி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்ந்து பணியாற்றுவது […]

இந்தியாவின் மிகப்பெரிய காதல் காவியம் “லவ் & வார்” 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்திய சினிமாவில் மிகப்பெரிய அறிவிப்புகளில் ஒன்றாக, இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் “லவ் & வார்” திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஆம் ஆண்டு ஜனவரி 21ஆம் தேதி, குடியரசு தின வார இறுதியை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர், விக்கி கௌஷல் மற்றும் ஆலியா பட் இணைந்து நடித்துள்ளனர். உணர்ச்சி தீவிரம், காதல், மோதல்கள் […]

திசைதிருப்பும் திமுக-வின் தில்லுமுல்லுகள்; ‘விசில்’ புயலில் வீழ்வது உறுதி: தொண்டர்களுக்கு விஜய் அதிரடி மடல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஒரு உணர்ச்சிகரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசின் ‘திசைதிருப்பும்’ அரசியல் குறித்தும், தவெக-வின் தேர்தல் வியூகம் குறித்தும் அவர் விரிவாகப் பேசியுள்ளார். திமுக அரசின் ‘கபட நாடகம்’ மற்றும் அதிகார துஷ்பிரயோகம் திமுக அரசு காபந்து அரசாக இருந்துகொண்டு, தேர்தல் ஆணையத்தின் மூலம் அதிகாரிகளைத் தவறாகப் பயன்படுத்தி தவெக வேட்பாளர்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக விஜய் […]

ஜனநாயகன் To ஜெயிலர் 2: இணையத்தில் கசியும் பிரம்மாண்ட படங்கள் – அதிர்ச்சியில் கோலிவுட்.

தமிழ் சினிமாவின் இரு பெரும் துருவங்களான விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரின் படங்களுக்கு ஏற்பட்டுள்ள இணையக் கசிவு அச்சுறுத்தல், கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜனநாயகன்’ சந்தித்த பேரிடி சுமார் ரூ. 500 கோடி பட்ஜெட்டில், ஒரு ஆண்டுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான கலைஞர்களின் உழைப்பில் உருவான திரைப்படம் விஜய்யின் ‘ஜனநாயகன்’. ஏற்கனவே வெளியீட்டுத் தேதி மாற்றத்தால் வணிக ரீதியாகத் தவித்த கே.வி.என் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனத்திற்கு, படம் இணையத்தில் கசிந்தது பேரிடியாக அமைந்தது. இப்படத்தின் எடிட்டிங் பணியில் ஈடுபட்ட […]

நிதேஷ் திவாரியின் ‘ராமாயணம்’: ராவணன் யாஷ் பகிர்ந்த சுவாரஸ்யத் தகவல்கள்!

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ‘ராமாயணம்’ காவியம், இயக்குனர் நிதேஷ் திவாரியின் பிரம்மாண்ட இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்பில் நமித் மல்ஹோத்ரா தயாரித்துள்ள இந்தப் படம் குறித்த முக்கிய அப்டேட்களை, ராவணனாக நடிக்கும் நடிகர் யாஷ் அமெரிக்காவில் நடைபெற்ற விழாவில் பகிர்ந்துள்ளார். அவர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் உருவான சிறப்புக் கட்டுரை இதோ: நட்சத்திரப் பட்டாளம் இந்த இதிகாசக் கதையில் இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் கைகோர்த்துள்ளனர்: ராமர்: ரன்பீர் […]

கங்கை அமரன் – ரோஜா நடிப்பில் ‘லெனின் பாண்டியன்’ ட்ரெய்லர் வெளியீடு!

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் டிடி பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லெனின் பாண்டியன்’. இந்தப் படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதில் மூத்த கலைஞர் கங்கை அமரன் மற்றும் நடிகை ரோஜா ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.   இப்படத்தின் சிறப்பம்சங்கள் இதோ: கதைக்களம்: அதிகாரமும் அடக்குமுறையும் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினையான மணல் கொள்ளையை மையமாக வைத்து இந்தப் படம் நகர்கிறது. மணல் கொள்ளையால் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்படும் ஒரு […]