புதுச்சேரி முதல்வர் வெளியிட்ட ‘துரோகம் பழகு’ படத்தின் இரண்டாவது பார்வை!

மகிழ் புரொடக்ஷன்ஸ் சார்பில் C. பியூலா மகிழ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘துரோகம் பழகு’. இப்படத்தில் தக்க்ஷன் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். சீயோன் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், ‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இரண்டாவது பார்வையை புதுச்சேரி முதலமைச்சர் N. ரங்கசாமி வெளியிட்டார். மேலும், படக்குழுவினரை வாழ்த்திய அவர், திரைப்படத்தின் ரஃப் கட் காட்சிகளையும் பார்வையிட்டு படக்குழுவினரின் பணியைப் பாராட்டினார்.

பொதுநலன் சார்ந்த கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ள தக்க்ஷன் விஜய்யையும் முதலமைச்சர் பாராட்டியதுடன், திரைப்படத்தின் முழுக் குழுவினரின் கடின உழைப்புக்கும் தனது வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்தார்.

- Advertisement -

இப்படத்தில் லொள்ளு சபா ஜீவா, ஜி. எம். குமார், ஜானகி அம்மா, வனிதா விஜயகுமார், அப்புக்குட்டி, அமுதவாணன், திவாகர், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பாலா மற்றும் ராஜா இணைந்து இசையமைத்துள்ள இப்படத்திற்காக கவிஞர் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். அந்தப் பாடலை வைக்கம் விஜயலட்சுமி பாடியுள்ளார்.

‘துரோகம் பழகு’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

CM N. RangasamyDhrogham PazhaguPuducherry CM N. Rangasamy Unveils Second Look of Dhrogham Pazhagu