Browsing category

Latest News

“நெருக்கடிகளைத் தாண்டி மக்களுக்காகவே வந்தேன்” – தமிழக மக்களுக்கு விஜய் உருக்கமான மடல்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை இன்றுடன் நிறைவடையும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் பின்னணியில் உள்ள வலிகளையும், இலக்குகளையும் விளக்கி மக்களுக்கு உருக்கமான திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார். அரசியல் எதிரிகளைச் சாடுதல்: தனது கடிதத்தில், அரசியல் களத்தில் தான் சந்தித்து வரும் சொல்லொணா நெருக்கடிகளையும் வேதனைகளையும் பட்டியலிட்டுள்ள விஜய், மக்கள் விரோத தீயசக்தியான திமுகவையும், பிளவுவாத சக்தியான பாஜகவையும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். அதிகாரங்களை ஏவி தன்னை மிரட்டவோ […]

பார்த்திபனுக்கு ‘சாதி, மதமற்றவர்’ சான்றிதழ்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திரையுலகில் எப்போதும் வித்தியாசமான முயற்சிகளுக்குப் பெயர் பெற்றவர் நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன். தற்போது தனது நிஜ வாழ்க்கையிலும் ஒரு புரட்சிகரமான முன்னெடுப்பை எடுத்து, அதில் சட்டப்பூர்வ வெற்றியும் பெற்றுள்ளார். வழக்கின் பின்னணி: தன்னைக் குறிப்பிட்ட எந்தச் சாதி அல்லது மத அடையாளத்திற்குள்ளும் சுருக்கிக்கொள்ள விரும்பாத பார்த்திபன், தனக்கு ‘சாதி, மதமற்றவர்’ (No Caste, No Religion) என்ற சான்றிதழ் வழங்கக் கோரி சோழிங்கநல்லூர் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், […]

இந்து கடவுள்கள் குறித்து அவதூறு: பிரகாஷ் ராஜுக்கு ரூ. 100 கோடி நஷ்டஈடு நோட்டீஸ்!

நடிகர் பிரகாஷ் ராஜ், ராமாயணம் மற்றும் இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக அவருக்கு ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சர்ச்சையின் பின்னணி: சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசிய பிரகாஷ் ராஜ், “ராமரும் லட்சுமணரும் வடநாட்டிலிருந்து தென்னாட்டிற்கு ஆக்கிரமிப்பு செய்ய வந்தவர்கள்” என்ற தொனியில் பேசியதாகக் கூறப்படுகிறது. இவரது இந்தப் பேச்சு இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சட்ட […]

20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மேஜிக்? சித்தார்த் – த்ரிஷா கூட்டணி!

திரையுலகில் 20 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக வலம் வரும் சித்தார்த் மற்றும் த்ரிஷா, தற்போது நான்காவது முறையாக ஒரு புதிய படத்தில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பழைய நினைவுகள்: இவர்கள் இருவரும் முதன்முதலில் மணிரத்னத்தின் ‘ஆயுத எழுத்து’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அதன்பிறகு தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘நுவ்வோஸ்தானந்தே நேனோடண்டானா’ (தமிழில் ‘உனக்கும் எனக்கும்’) மற்றும் தமிழில் ‘அரண்மனை 2’ ஆகிய படங்களில் இணைந்து நடித்தனர். புதிய அப்டேட்: தற்போது சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு […]

‘வடசென்னை 2’ குறித்து தனுஷின் மாஸ் அப்டேட்

“கர” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் தனுஷ், தனது பேச்சால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். விழாவில் பேசிய அவர், நடிகை மமிதா பைஜுவின் நடிப்பை நடிகை நித்யா மேனனுடன் ஒப்பிட்டு பாராட்டினார். படத்தின் தலைப்பு குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த தனுஷ், தனது முன்னைய படங்களான VIP மற்றும் *திருச்சிற்றம்பலம்* போன்றவை ஆரம்பத்தில் சந்தேகத்துக்கு உள்ளானாலும் பின்னர் பெரிய வெற்றியை பெற்றதை நினைவுகூர்ந்தார். அதே நேரத்தில், ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் *வடசென்னை […]

“உணர்வுப்பூர்வமான அதேசமயம் அழகான ரொமான்ஸ் படம் தான் ‘பிரேக்ஃபாஸ்ட்’” – நடிகை ரோஸ்மின்!

மாடலிங் துறையில் கவனம் பெற்ற நடிகை ரோஸ்மின், இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படத்தில் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தை தாண்டி, வலுவான மற்றும் கதையை முன்னெடுக்கும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ‘செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ போன்ற படங்களில் இயக்குநர் காந்தி கிருஷ்ணா உருவாக்கிய கதாநாயகிகள் ரசிகர்களின் மனதில் நிலைத்திருப்பதை எடுத்துக்காட்டிய ரோஸ்மின், அதுபோன்ற தாக்கம் ஏற்படுத்தும் கதாபாத்திரமே இந்தப் படத்தில் தன்னுக்குக் கிடைத்துள்ளதாக […]

விஜய், சங்கீதா விவகரத்து வழக்கில் புதிய உத்தரவு

நடிகரும், தவெக கட்சியின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கு பெரும் கவனம் ஈர்த்து வருகிறது. கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி முதன்முறையாக விசாரணைக்கு வந்த இந்த வழக்கு, பின்னர் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு தேர்தலுக்கு முன் மூன்று நாட்களுக்கு முன்பாக ஒத்திவைக்கப்பட்டது. இன்றைய விசாரணைக்காக நடிகர் விஜய் நேரில் ஆஜராக வேண்டும் என முன்பே சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் தேர்தல் பணிகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால், விஜய்யும் சங்கீதாவும் காணொலி […]

இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது – குவியும் வாழ்த்து!

திரைப்பட இயக்குநர் அட்லீ மற்றும் அவரது மனைவி பிரியா அட்லீ தம்பதிக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த இனிய வருகையால் அவர்களின் குடும்பத்தில் புதிய சந்தோஷம் மலர்ந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை அவர்களது மகன் மீர் மிகவும் உணர்ச்சிபூர்வமாக சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துள்ளார். “எனக்கு தங்கை பிறந்திருக்கிறார்… நான் இப்போது அண்ணன் ஆகிவிட்டேன்!” என்ற அவரது அறிவிப்பு ரசிகர்களின் இதயங்களை கவர்ந்துள்ளது. இந்த தகவல் வெளியானதும் நாடு முழுவதும் இருந்து ரசிகர்கள் மற்றும் […]

‘பிரேக்ஃபாஸ்ட்’ – நவீன உறவுகளை பிரதிபலிக்கும் கண்ணாடி: ராணவ் பேட்டி!

“மாடர்ன் ரிலேஷன்ஷிப்பை பிரதிபலிக்கும் கண்ணாடியாக ‘பிரேக்ஃபாஸ்ட்’ படம் இருக்கும்” என நடிகர் ராணவ் தெரிவித்துள்ளார். சின்னத்திரை மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, ‘பிக் பாஸ் சீசன் 8’ நிகழ்ச்சியின் மூலம் பரவலாக அறிமுகமானவர் ராணவ். தனது இயல்பான நடிப்பாலும், நேர்மையான அணுகுமுறையாலும் ரசிகர்களிடையே விரைவில் இடம்பிடித்த அவர், தற்போது வெள்ளித்திரையில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இயக்குநர் காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ திரைப்படம் ரொமான்டிக் ஜானரில் உருவாகி, ஏப்ரல் 24ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. […]

விரைவில் மகா அவதார் பரசுராம்!

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் அடுத்த பிரம்மாண்ட முயற்சியாக ‘மகா அவதார் பரசுராம்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக், பரசுராம ஜெயந்தியை முன்னிட்டு வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக திகழும் ஹோம்பாலே ஃபிலிம்ஸ், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் பிரம்மாண்டமான திரைப்பயணங்களையும் ரசிகர்களுக்கு வழங்கி வருகிறது. ‘ராஜகுமாரா’, ‘கே.ஜி.எஃப்’, ‘காந்தாரா’, ‘சலார்’, ‘மகா அவதார் நரசிம்மா’ போன்ற வெற்றி படங்களின் வரிசையில், தற்போது புதிய அத்தியாயமாக ‘மகா அவதார் பரசுராம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் அஷ்வின் […]