விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் கலந்த குடும்பத் திரைப்படம் ‘அப்பா குட்டி’ வரும் அக்டோபர் 16, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அப்பா–மகள் இடையிலான ஆழமான பாசத்தையும், அவர்களின் வலுவான உறவையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில், விஜய் ஆண்டனி உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்துடன் ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே வெளியான படத்தின் செகண்ட் லுக் போஸ்டரில் விஜய் ஆண்டனியுடன் சிறுமி ஒருவர் இடம்பெற்றிருந்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அப்பா–மகள் பாசத்தை பிரதிபலிக்கும் வகையில் அந்த போஸ்டர் அமைந்திருந்தது.

படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அக்டோபர் 16 வெளியீட்டை முன்னிட்டு படக்குழு விரைவில் புரமோஷன் பணிகளைத் தொடங்க உள்ளது.

இப்படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி, பேபி லித்தன்யா, பகவதி பெருமாள், ஹரிப்ரியா இசை, அருவி மதன், சித்ரா லட்சுமணன், ஸ்ரீஜா ரவி, வேட்டை முத்துக்குமார், ஜென்சன் திவாகர், முருகானந்தம், மூணாறு ரமேஷ், லிஸ்ஸி ஆண்டனி, குமார் நடராஜன், விஜயன், பிரவீனா, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Appa KuttyVijay AntonyVijay Antony’s Appa Kutty Release Date Announced