Browsing category

Latest News

ஆகஸ்ட் 21-ல் வெளியாகும் ‘மொத ராத்திரி’ – டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் நெகிழ்ச்சி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதையொட்டி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய தயாரிப்பாளர் ரவி சங்கர், இயக்குநர் ராஜா கதை சொன்ன உடனேயே தங்களுக்கு பிடித்துவிட்டதாக தெரிவித்தார். சிறிய பட்ஜெட்டில் உருவாகி வெற்றி பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ […]

31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் பிரபு – சுகன்யா ஜோடி!

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் 21-வது படைப்பாக உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘மேரிகோல்ட்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். சுதர்சன் இணை தயாரிப்பாளராக பணியாற்றுகிறார். திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில், நடிகர்கள் பிரபு மற்றும் சுகன்யா 31 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஜோடியாக இணைகின்றனர். முன்னதாக ‘செந்தமிழ்ப் பாட்டு’, ‘சின்ன மாப்ளே’, ‘மிஸ்டர் மெட்ராஸ்’ உள்ளிட்ட படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். ரக்ஷன் மற்றும் நம்ரிதா முக்கிய […]

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தனின் ‘அன்பில் அவன்’ டைட்டில் டீசர் ரிலீஸ்!

அசோக் செல்வன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘அன்பில் அவன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியிடப்பட்டுள்ளன. ஆர். கார்த்திகேயன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதியுள்ள இப்படத்திற்கு கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ஆர்.கே. செல்வா மேற்கொள்ள, கலை […]

ரவி தேஜா – பிரியா பவானி ஷங்கரின் இருமுடி கட்டு பட டிரைலர் வெளியானது!

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் திரையரங்க டிரெய்லர் இன்று தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளியாகியுள்ளது. சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. வெளியாகியுள்ள டிரெய்லர், குடும்ப உறவுகள், ஆக்‌ஷன், சஸ்பென்ஸ் மற்றும் த்ரில்லர் அம்சங்கள் நிறைந்த கதையை வெளிப்படுத்துகிறது. ரவி தேஜா நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பத் தலைவராக நடித்துள்ளார். மனைவி […]

பியார் ப்ரேமா கல்யாணம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளையே தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன நடக்கும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix இன்று வெளியிட்டுள்ளது. இயக்குநர் இளன் இயக்கியுள்ள இப்படத்தின் மூலம் அவர் முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகிறார். திரைப்படம் வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி Netflix-ல் வெளியாகிறது. டிரெய்லரில் சான்வி மேக்னா பவி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தன்னம்பிக்கையும் […]

பியார் பிரேமா கல்யாணம் டிரெய்லர் வெளியீடு -ஆகஸ்ட் 21 முதல் Netflix-ல் ஸ்ட்ரீமிங்!

இயக்குநர் இளன் முதன்முறையாக கதாநாயகனாக அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் முன்னிலையில் நடைபெற்றது. ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். டிரெய்லர் வெளியீட்டு விழாவில் வெற்றிமாறன், ராதிகா சரத்குமார், இளங்கோ குமரவேல், செந்தில், யோகிபாபு, சான்வி மேக்னா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், நடிகராக இருந்து இயக்குநராக மாறுவதற்கே அதிக தைரியம் தேவைப்படும் நிலையில், இளனிடம் […]

வைபவ் நடித்துள்ள ‘மாறுவேஷம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் வைபவ் நடிப்பில் உருவாகியுள்ள கிளாசிக்கல் மர்டர் மிஸ்ட்ரி திரில்லர் திரைப்படமான ‘மாறுவேஷம்’, யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 1-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஸ்ரீனி எழுதி இயக்கியுள்ள இப்படத்தை விஜய் ஆனந்த் மற்றும் வைபவ் இணைந்து ஓநைரோமன்சி பிக்சர்ஸ் சார்பில், மன்கி மேன் கம்பெனியுடன் இணைந்து தயாரித்துள்ளனர். படத்தின் முதல் பார்வை மற்றும் முதல் பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் […]

அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் அப்டேட்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. ஸ்டார் ஸ்டுடியோ18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை A for Apple Studios மற்றும் Cine 1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி ‘பத்தா’ திரைப்படம் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணி […]

‘சேயோன்’ படத்தின் 2-ம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மதுரையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. முதல் கட்டப் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் புதிய உத்வேகத்துடன் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். கதையின் அடுத்தகட்டத்திற்குள் படம் நகரும் நிலையில், முக்கியமான காட்சிகள் இந்தப் படப்பிடிப்பில் இடம்பெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகுமார் முருகேசன் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். […]

திருக்கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி, பாடகர் வேல்முருகன் நியமனம்!

தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்து, பெயர்ப்பட்டியலை தயாரிக்கும் குழுவில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் நிர்வாக இயக்குநர் அர்ச்சனா கல்பாத்தி மற்றும் பிரபல பாடகர் வேல்முருகன் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நியமனத்தைத் தொடர்ந்து, முதலமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு அர்ச்சனா கல்பாத்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த […]