கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்கே சுதீஷ் MP தயாரிப்பில் உருவாகி வரும் ‘கிங் அண்ட் குயின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- Advertisement -
இப்படத்தில் சண்முக பாண்டியன் கதாநாயகனாகவும், ஆதியா பிரசாத் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இளவரசு, பிரகதி, தம்பி ராமையா, ரமேஷ் திலக், சுனில், படூர் ரமேஷ், ‘பூவே உனக்காக’ புகழ் சங்கீதா, அஞ்சலி நாயர், மைனா நந்தினி, இந்திரஜா ரோபோ சங்கர், பட்டிமன்றம் ராஜா, நிகிலா ஷங்கர், மகிழ் திருமேனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் இப்படத்தை இயக்குநர் மணிசேயோன் இயக்குகிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, மனு இரவிச்சந்திரன் இசையமைக்கிறார். சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில், திரு இயக்கத்தில் உருவாகும் ‘வாணவேடிக்கை’ திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வரும் நிலையில், தற்போது ‘கிங் அண்ட் குயின்ஸ்’ படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.