கேப்டன் சினி கிரியேஷன்ஸ் 10-வது படம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடக்கம்!
கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்.கே. சுதீஷ் தயாரிக்கும் Production No.10 திரைப்படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று சென்னையில் சிறப்பாக தொடங்கியது. இப்படத்தில் நாயகனாக சண்முக பாண்டியன் நடிக்கிறார். ‘கட்டப்பாவ காணோம்’ படத்தை இயக்கிய மணிசியோன் இப்படத்தை இயக்குகிறார். பிரசன்ன குமார் ஒளிப்பதிவு செய்ய, மனு இரவிச்சந்திரன் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு தொடக்க நிகழ்வில், பிரேமலதா விஜயகாந்த் கேமராவை ஆன் செய்ய, பூர்ண ஜோதி சுதீஷ் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். மேலும், டாக்டர் […]