சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம், 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில், தற்போது ஆலியா பட்டின் புதிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன.
இதில் ஆலியா பட் இதுவரை ஏற்றிராத வகையில், நியூ ஜெனரேஷன் கேபரேட் அவதாரத்தில் காட்சியளிக்கிறார். முதல் போஸ்டரில் ஸ்லிட் ஸ்கர்ட் மற்றும் வித்தியாசமான சிகை அலங்காரத்துடன் நாற்காலியில் அமர்ந்திருக்கும் அவர், கிளாமரான தோற்றத்தில் இடம்பெற்றுள்ளார்.
- Advertisement -
மற்றொரு போஸ்டரில் மின்னும் கேபரேட் மேடையின் பின்னணியில் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் ஆலியா பட் காட்சியளிக்கிறார். அவரது உடை, அலங்காரம் மற்றும் ஒட்டுமொத்த காட்சியமைப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின் திரைப்படங்களுக்கே உரிய பிரம்மாண்டமான கலை வடிவமைப்பு பிரதிபலிக்கிறது.
இந்த புதிய போஸ்டர்கள் மூலம் ஆலியா பட் இப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே ரன்பீர் கபூரின் கதாபாத்திர தோற்றங்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்ற நிலையில், தற்போது ஆலியா பட்டின் புதிய அவதாரமும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘லவ் & வார்’ திரைப்படத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌஷல் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படம் 2027 ஜனவரி 21-ம் தேதி உலகம் முழுவதும் இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.