ஷங்கர் மகன் படத்தில் ரீ என் ட்ரி கொடுக்கும் நான் அவனில்லை ஜீவன்?

‘காக்க காக்க’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாகவும், ‘நான் அவனில்லை’ படத்தில் கிரே ஷேட் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரைத்துறைக்கு திரும்புகிறார். பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் ‘லவ்வர் பாய்’ படத்தில் அவர் இணைந்துள்ளார்.

அறிமுக இயக்குநர் அசோக் குமார் இயக்கும் இப்படத்தில் அர்ஜித் சங்கர் மற்றும் க்ரித்தி ஷெட்டி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். தற்போது ஜீவனும் படக்குழுவில் இணைந்துள்ள நிலையில், இதனை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வகையில் சிறப்பு புரோமோ வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

- Advertisement -

வித்தியாசமான கமர்ஷியல் கதைகளைத் தேர்வு செய்து ஹீரோவாகவும் ரசிகர்களிடம் தனி இடம் பிடித்த ஜீவன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்கத் தொடங்கியுள்ளது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ‘லவ்வர் பாய்’ படத்தில் ஜீவன் ஏற்று நடிக்கும் கதாபாத்திரம் குறித்த தகவல்களை படக்குழு ரகசியமாக வைத்துள்ளது. புதிய தலைமுறை நடிகர்களுடன் ஜீவன் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம் இப்படத்தை தயாரிக்கிறார். படம் குறித்த அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

JeevanKaakha KaakhaKrithi ShettyLover Boy Arjith ShankarNaan AvanillaiNaan Avanillai Actor Jeevan to Make His Comeback in Shankar’s Son’s Film