Browsing category

Latest News

”ஒன்றா ரெண்டா” திரைத்துறையில் 25 ஆண்டு கால பயணத்தை கொண்டாடும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு, அவரது திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் சென்னையில் நடைபெற்ற பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் தொடர்ச்சியாக, தற்போது இந்த இசைக் கொண்டாட்டம் மலேசியாவின் கோலாலம்பூருக்கு பயணிக்கிறது. ‘ஒன்றா ரெண்டா – 25 Years of GVM’ எனும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி வரும் அக்டோபர் 10, 2026 அன்று கோலாலம்பூரில் நடைபெற உள்ளது. கௌதம் வாசுதேவ் மேனனின் திரைப்படங்களுடன் […]

துல்கர் சல்மானின் ஏஒடி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

துல்கர் சல்மான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ஆகாசம்லோ ஓக தாரா’ (AOT) திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, இப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகிறது. துல்கர் சல்மான், சாத்விகா வீரவல்லி மற்றும் ஸ்ருதி ஹாசன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை பவன் சாதினேனி இயக்கியுள்ளார். லைட்பாக்ஸ் மீடியா சார்பில் சந்தீப் குண்ணம் மற்றும் ரம்யா குண்ணம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை கீதா ஆர்ட்ஸ் மற்றும் ஸ்வப்னா சினிமா […]

அர்ஜுன் தாஸ் – ஐஸ்வர்யா லட்சுமி நடித்த லவ்! ஓடிடி தொடர் வெளியீடு அறிவிப்பு!

டிஜிட்டல் யுகத்தில் காதலும் உறவுகளும் எவ்வாறு மாறியிருக்கின்றன என்பதை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது புதிய தமிழ் வெப் சீரிஸ் ‘#Love’. நேரில் சந்தித்து காதல் மலர்ந்த காலம் மாறி, தற்போது டேட்டிங் ஆப்களில் ஸ்வைப், மேட்ச், மெசேஜ் மூலம் உறவுகள் தொடங்கும் சூழலை இந்தத் தொடர் பேசுகிறது. சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள இந்தத் தொடரை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார். இதில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். FOUND மற்றும் […]

அர்ஜுன்தாஸ் புதிய படம் பூஜையுடன் தொடங்கியது!

விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள Silver Tree Studios நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. Silver Tree Studios மற்றும் POP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படம், ‘Production No.1’ என்ற தற்காலிக தலைப்பில் உருவாகிறது. இதில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் […]

தமிழக ரசிகர்களை கவரும் ‘Bigg Boss Tamil Celebration Van’!

‘Bigg Boss Tamil Season 10’ நிகழ்ச்சியின் அனுபவத்தை ரசிகர்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள Bigg Boss Tamil Celebration Van, தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்னை, வேலூர், சேலம் ஆகிய நகரங்களைத் தொடர்ந்து தற்போது கோயம்புத்தூரில் Celebration Van முகாமிட்டுள்ளது. மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து Celebration Van-ஐ பார்வையிட்டு வருகின்றனர். இதில் அமைக்கப்பட்டுள்ள Confession Room ரசிகர்களின் கவனத்தை வெகுவாக […]

எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா – கிளாப் அடித்து தொடங்கி வைத்தார் கமல்ஹாசன்

‘இசை மேதை’ மற்றும் ‘பாரத ரத்னா’ எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கையைத் தழுவி உருவாகும் புதிய திரைப்படம் ‘எம். எஸ். – எ லெகசி ஆன் ஸ்கிரீன்’. தேசிய விருது பெற்ற இயக்குநர் கௌதம் தின்னனூரி இயக்கும் இப்படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அல்லு அரவிந்த், ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பென்னி வாசு ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமி அரங்கில் இப்படத்தின் தொடக்க […]

சைமா விருதுகளில் 6 விருதுகளை அள்ளிய ‘டூரிஸ்ட் ஃபேமிலி’!

தென்னிந்திய திரையுலகில் சிறந்த படைப்புகள் மற்றும் கலைஞர்களை கவுரவிக்கும் முக்கிய விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு மொழிகளில் வெளியாகும் சிறந்த திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான சைமா விருது விழாவில் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் மொத்தம் 6 விருதுகளை வென்று கவனம் பெற்றுள்ளது. சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில், அறிமுக இயக்குநர் அபிஷன் […]

பைசன் காளமாடன் படத்திற்காக சைமா சிறந்த நடிகர் விருது வென்ற துருவ் விக்ரம்

தென்னிந்திய திரையுலகில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கவுரவிக்கும் முக்கிய விருது விழாக்களில் ஒன்றாக சைமா (SIIMA) விருதுகள் திகழ்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான சைமா விருது விழாவில் ‘பைசன் காளமாடன்’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக துருவ் விக்ரம் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். இளம் நடிகரான துருவ் விக்ரம், தனது முதல் படத்திலிருந்தே மாறுபட்ட கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் […]

டி.ராஜேந்தர் இசையில் முதல் முறையாக பாடிய இசைஞானி இளையராஜா!

எம்.பி.எம். எண்டர்டெயின்மெண்ட் சார்பில் இந்துமதி கோபி தயாரிக்க, ஆர். கோபி வழங்கும் திரைப்படம் ‘கன்னடத்து பைங்கிளி’. ‘சிங்கம் புலி’, ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாய் ரமணி இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். பன்முகக் கலைஞர் டி. ராஜேந்தர் இசையமைக்கும் இப்படத்தில், அவரது இசையில் முதல் முறையாக இசைஞானி இளையராஜா பாடியுள்ளார். மேலும், சமீபத்தில் மறைந்த நடிகரும் இயக்குநருமான கே. பாக்யராஜ் நடித்த கடைசி திரைப்படமாகவும் ‘கன்னடத்து பைங்கிளி’ அமைந்துள்ளது. டி. ராஜேந்தர் மற்றும் […]

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ டீசர் வெளியானது!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், தொடர்ந்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் நகர்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் […]