Browsing category

Latest News

16வது ஆண்டு திருமணத்தை ஒட்டி மனைவி ஆர்த்தியுடன் இருக்கும் படங்களை பகிர்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி இன்று தங்களது 16-வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இதையொட்டி, சிவகார்த்திகேயனுடன் இருக்கும் புகைப்படங்களை ஆர்த்தி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதிக்கு கடந்த 2010-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு ஆராதனா, குகன், பவண் என ஒரு பெண் குழந்தையும், இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, […]

விஜய்யின் வாழ்க்கை வரலாறு படம் எடுத்தால் டைட்டில் என்ன தெரியுமா? அஸ்வத் மாரிமுத்து சுவாரசிய பதில்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் அஸ்வத் மாரிமுத்து, சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடிகரும் தமிழக முதலமைச்சருமான ஜோசப் விஜய்யின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட பயோபிக் திரைப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அஸ்வத் மாரிமுத்து, ‘டிராகன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ‘தர்மன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், முதலமைச்சர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக இயக்கும் […]

‘அரசன்’ படப்பிடிப்பு தளத்தில் அனிருத்!

சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தற்போது படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், திட்டமிட்டபடி எந்தவிதத் தொய்வும் இன்றி படப்பிடிப்பு பணிகள் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ரசிகர்கள் […]

பிரகாஷ் ராஜ் நடித்த ஃபாதர் திரைப்படத்தின் டீசர் வெளியானது!

பிரபல இயக்குநர் ஆர். சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஃபாதர்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமான பாசம், புரிதலின்மை, எதிர்பார்ப்புகள் மற்றும் சொல்லப்படாத உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டார்லிங் கிருஷ்ணா மற்றும் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், படத்தின் உணர்வுப்பூர்வமான களத்தையும் முன்னணி நடிகர்களின் […]

உளவுத்துறை நடவடிக்கைகளின் பின்னணியில் ‘ஆபரேஷன் டிரால்’

அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பான் இந்தியா இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்‌ஷன் த்ரில்லர், மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், ஜம்மு & காஷ்மீரின் டிரால் பகுதியில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை பின்னணியாகக் கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் […]

அவெஞ்சர்ஸ் ரசிகர்களே மீண்டும் கொண்டாட்டத்திற்கு தயாராகுங்கள்!

மார்வெல் ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில், உலகம் முழுவதும் சாதனை படைத்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மீண்டும் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் – என்கோர்’ என்ற பெயரில் இப்படம் செப்டம்பர் 25, 2026 முதல் இந்தியா முழுவதும் திரையிடப்பட உள்ளது. மார்வெல் ஸ்டுடியோஸின் ‘இன்ஃபினிட்டி சாகா’வின் பிரம்மாண்டமான இறுதிப்பகுதியான இப்படம் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது. மேலும், ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் புதிய பிரீமியம் லார்ஜ் […]

சாதனை வீரருக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை சிம்ரன்

காமன்வெல்த் போட்டியில் ஆண்களுக்கான 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துப்பாண்டியை நடிகை சிம்ரன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது, ராஜா முத்துப்பாண்டி தனது காமன்வெல்த் வெள்ளிப் பதக்கத்தை சிம்ரனிடம் காண்பித்தார். அவரது கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியைப் பாராட்டிய சிம்ரன், இந்தச் சாதனை அவரது வெற்றிப் பயணத்தின் தொடக்கம் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் மேலும் பல உயரங்களை அவர் எட்ட […]

“யாஷ் ஒரே ஒரு ராக்கிங் ஸ்டார்” – ‘டாக்ஸிக்’ விழாவில் ஹுமா குரேஷி புகழாரம்!

‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம் ஆகஸ்ட் 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. KVN Productions மற்றும் Monster Mind Creations இணைந்து தயாரித்துள்ள இப்படம் ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம் மற்றும் அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களுடன் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் […]

சாய் அபயங்கரின் ‘ரதிமா’ பாடல் வெளியானது!

இளம் இசையமைப்பாளரும் பாடகருமான சாய் அபயங்கரின் 6-வது சுயாதீன (Indie) பாடலான ‘ரதிமா’ வெளியாகி ரசிகர்களிடையே கவனம் ஈர்த்து வருகிறது. திங்க் இண்டி நிறுவனம் மூலம் வெளியிடப்பட்டுள்ள இப்பாடல், காதல் முறிவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நவீன பாப் இசையுடன் கவ்வாலி இசையின் சாயலை இணைத்து, பிரிவின் வலியை சோகமாக மட்டுமே சொல்லாமல், இளமைத் துடிப்புடனும் நேர்மறையான அணுகுமுறையுடனும் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ‘ரதிமா’ பாடலின் இசைக் காணொளியில் சாய் அபயங்கருடன் நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் இணைந்து நடித்துள்ளார். […]

இயக்குநர் சுசி கணேசனின் ‘ஒரண்ட’ படப்பிடிப்பு நிறைவு

இயக்குநர் சுசி கணேசன் பிறந்தநாளான இன்று (ஆகஸ்ட் 25), அவர் இயக்கி வரும் ‘ஒரண்ட’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு நிறைவு மற்றும் பிறந்தநாள் என இரட்டை கொண்டாட்டத்தை படக்குழுவினருடன் இணைந்து பிரியாணி சமைத்து கொண்டாடியுள்ளார் சுசி கணேசன். இதுகுறித்து பேசிய அவர், “சினிமா பிரபலங்களின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் சில நேரங்களில் வித்தியாசமான அனுபவமாக அமைந்து விடும். அந்த வகையில், நான் பணியாற்றிய படங்களில் ‘ஒரண்ட’ மட்டுமே என் பிறந்தநாளன்று நிறைவு பெற்றுள்ளது. அதுவும் படப்பிடிப்பு […]