ஆசிய விளையாட்டுப் போட்டியில் சாதனை படைத்த வித்யா ராமராஜ்.. ரஜினிகாந்த், சூரி நேரில் பாராட்டு!

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து பாராட்டியுள்ளார்.

வித்யா ராமராஜின் சாதனைகளைப் பாராட்டிய ரஜினிகாந்த், மேலும் பல வெற்றிகளைப் பெற தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பின்போது சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் எம். செண்பகமூர்த்தி மற்றும் பயிற்சியாளர் நேபால் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

- Advertisement -

அதேபோல், நடிகர் சூரியும் வித்யா ராமராஜை நேரில் சந்தித்து அவரது வெற்றிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டுக்கும் தமிழகத்துக்கும் பெருமை சேர்த்ததற்காக பாராட்டிய சூரி, தொடர்ந்து பல்வேறு சாதனைகளை படைக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வித்யா ராமராஜ் பெற்றுள்ள தொடர் பதக்கங்கள் விளையாட்டு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில், திரையுலக பிரபலங்களின் இந்த நேரடி வாழ்த்து அவருக்கு மேலும் உற்சாகத்தை அளித்துள்ளது.

Asian Games Medalist Vidhya Ramaraj Honoured by Rajinikanth and SooriRajinikanthSooriVidhya Ramaraj