Browsing author

Suresh

இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை: சிம்பு சுவாரஸ்ய தகவல்..

கவுதம் மேனன் மற்றும் சந்தானம் குறித்து சிம்பு பேசிய தகவல்கள் பார்ப்போம்.. பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இப்படத்தின் விழாவில் சிம்பு பேசும்போது, ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் டிரெய்லர் நன்றாக இருந்தது. சந்தானம் உடல் அசைவுகள், டைமிங் காமெடி எல்லாமே ரொம்ப சூப்பராக இருந்தது. அவருடைய நண்பர் ஆர்யா தயாரித்திருக்கிறார். நண்பர்கள் படம் பண்ணும்போது அற்புதமாகவே வரும். ஆர்யாவுக்கு கண்டிப்பாக இது வெற்றிப் […]

தளபதி வெற்றி கொண்டான் என்ற TVK: ‘ஜனநாயகன்’ பட அப்டேட்ஸ்..

‘ஜனநாயகன்’ மற்றும் TVK பற்றிய தகவல்கள் காண்போம்.. எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ ஷுட்டிங் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்பட பலர் நடிக்கின்றனர். விஜய்யின் விருப்பமான இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் ஆகியோர் ‘ஜனநாயகன்’ படத்தின் ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை […]

பவன் கல்யாண் மற்றும் விஜய்யின் அரசியல் குறித்து, பிரகாஷ்ராஜ் பேச்சு..

‘இருவருக்குமே ஆழமான புரிதல் இல்லை’ என பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பவன் கல்யாண் மற்றும் விஜய்யுடன் தனது நீண்டகால நட்பையும், அவர்கள் அரசியலுக்கு வந்தது குறித்தும் பிரகாஷ் ராஜ் தெரிவிக்கையில், பவன் கல்யாண், தனது சகோதரர் சிரஞ்சீவியின் ரசிகர் பலத்தால் 2024-ல் ஆந்திரப் பிரதேச துணை முதல்வரானார். நடிகர் விஜய், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் மூலம் ஆரம்பத்தில் திரையுலகில் கவனம் பெற்றார். இருந்தும், இருவருக்கும் தெளிவான அரசியல் பார்வையோ, நாட்டின் பிரச்சினைகள் குறித்த […]

அஜித்தும் அவரது ரசிகர்களும்: நடிகை சினேகா பேச்சு, வைரல்..

ஏகே மற்றும் அவரது ஃபேன்ஸ் குறித்து சினேகா பகிர்ந்த தகவல்கள் பார்ப்போம்.. ‘தல’ அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, அஜித் நடிக்கும் அடுத்த படத்தையும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கலாம் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது. மேலும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலும் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, மத்திய அரசு அஜித்துக்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது வழங்கியது. அதனையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரும் பல […]

ஒரே படத்தில் ஹீரோ & வில்லனாக நடிக்கிறார் சூரி..

சூரி நடிக்கும் ‘மண்டாடி’ படத்தின் தகவல்கள் காண்போம்.. நடிகர் சூரி, கதையின் நாயகனாக நடித்த ‘கொட்டுக்காளி’ படம் சர்வதேச அளவில் பல திரைப்பட விழாக்களில் கலந்து கவனம் ஈர்த்தது. இதைத்தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கிய ‘கருடன்’ படம் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்த சூரி, இதுவரை நாயகனாக நடித்த 3 படங்களுமே வெற்றி பெற்றன. தற்போது ‘மாமன்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 16-ந்தேதி ரிலீஸாக உள்ளது மேலும், சூரி நாயகனாக நடித்துள்ள மற்றொரு […]

‘ஜனநாயகன்’ படத்துக்காக விஜய்யின் நியூ லுக்: ரசிகர்கள் குஷி..

‘ஜனநாயகன்’ படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. விஜய் நடிப்பில் அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் கேவிஎன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும், பாபி தியோல் வில்லனாகவும் நடிக்கின்றனர். மேலும் பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர். விஜய்யின் கடைசிப் படம் என்பதால், செம கமர்ஷியலாக இருக்கும் என சொல்லப்பட்டது. இப்படத்திலிருந்து வெளியான டைட்டில் போஸ்டர்களை பார்க்கும்போது, இது அரசியல் […]

விமர்சனங்கள் நேர்மையாக இருக்கவேண்டும்: கார்த்திக் சுப்பராஜ் பேச்சு..

‘ஆன்லைன் விமர்சனங்களை பார்ப்பதில்லை’ என தெரிவித்துள்ளார் ‘ரெட்ரோ’ இயக்குனர். இது பற்றி அவர் கூறிய தகவல்கள் காண்போம்.. ‘கங்குவா’ தோல்விக்கு பின்னர் ‘ரெட்ரோ’ தந்த வெற்றியால் சூர்யா உள்பட படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், கார்த்திக் சுப்பராஜ் கூறும்போது, ‘ஆன்லைன் விமர்சனங்களை பார்க்கக்கூடாது என்பதை ‘ரெட்ரோ’ படத்தின் மூலம் உணர்ந்து கொண்டேன். காரணம், அதில் நிறைய அஜெண்டாக்கள் உள்ளே கொண்டு வரப்படுகிறது. நான் எல்லா ஆன்லைன் விமர்சனங்களையும் சொல்லவில்லை. சில விமர்சனங்களை பார்க்கும்போது, அது நேர்மையாக இருக்கிறதா […]

சினிமாவில் இருந்து சூப்பர் ஸ்டார் ஓய்வு பெறுகிறாரா?: லதா ரஜினிகாந்த் விளக்கம்..

ரஜினியின் ஓய்வு பற்றி, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்த தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் ரஜினி உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். தற்போது கூலி படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர, நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் […]

திரைப்படத்தை தடை செய்தது தவறு: மத்திய அரசுக்கு எதிராக பிரகாஷ்ராஜ்..

மத்திய அரசுக்கு எதிராக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ள தகவல்கள் காண்போம்.. ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்திய அரசு தொடர்ந்து பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. பாகிஸ்தானிய நடிகர் ஃபவாட் கான் நடித்த ‘அபீர் குலால்’ படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்குப் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரபல வில்லன் நடிகரான பிரகாஷ் ராஜும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘அபீர் குலால்’ படத்துக்கு தடை தவறு என்றும், அரசுக்குப் […]

என் அம்மாவை மீறி, நான் செய்த ஒரே விஷயம்: நடிகை தேவயானி ஓபன் டாக்..

இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து, பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டார் தேவயானி என்பது தெரிந்ததே. தற்போது அந்நிகழ்வுகள் குறித்து மனம் திறந்து அவர் தெரிவிக்கையில், ‘நான் பிறந்தது மும்பையில் தான். அங்கு தான் படித்தேன். எனக்கு நடிப்பு, நடனத்தின் மீது ஈடுபாடு இருந்ததால் நடிகையாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. அப்போது ஹிந்தி படம் ஒன்றில் அறிமுகமானேன். இப்போது வரைக்கும் அந்த படம் வெளியாகவே இல்லை. அதுதான் நான் நடித்த முதல் படம். அதன் பிறகு, மலையாளத்தில் […]