கவுதம் மேனன் மற்றும் சந்தானம் குறித்து சிம்பு பேசிய தகவல்கள் பார்ப்போம்..
பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ள படம் ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’. இப்படத்தின் விழாவில் சிம்பு பேசும்போது,
‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் டிரெய்லர் நன்றாக இருந்தது. சந்தானம் உடல் அசைவுகள், டைமிங் காமெடி எல்லாமே ரொம்ப சூப்பராக இருந்தது. அவருடைய நண்பர் ஆர்யா தயாரித்திருக்கிறார். நண்பர்கள் படம் பண்ணும்போது அற்புதமாகவே வரும். ஆர்யாவுக்கு கண்டிப்பாக இது வெற்றிப் படமாக அமைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
‘மன்மதன்’ தொடங்கி இப்போது வரை சந்தானத்தின் உழைப்பு ஆச்சரியப்பட வைக்கிறது. இப்படத்தில், எங்கள் இயக்குனர் கவுதம் மேனனை இப்படி செய்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை. அந்த ஒரு விஷயத்துக்கு மட்டும் உங்களை சும்மா விடமாட்டேன்.
நான் எங்கு சென்றாலும், பலரும் என்னிடம் நீங்கள் பலபேரை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். உதவி செய்திருக்கிறீர்கள். ஆனால், சந்தானம் ஒருத்தர் மட்டுமே உங்களைப் பற்றி அனைத்து இடங்களிலும் பேசிக் கொண்டே இருக்கிறார் என்பார்கள். அதற்கு அது அவருடைய கேரக்டர் என்பேன்.
சந்தானம் பழைய விஷயங்களை மறக்காமல் இருப்பதால்தான், இன்று வரை அவருடைய டீம் கூடவே இருக்கிறார்கள். அதனால், இன்று இவ்வளவு பெரிய வளர்ச்சியை அடைந்திருக்கிறார். அடுத்து இருவரும் ‘எஸ்டிஆர்49’ படத்தில் இணைந்து நடிக்கிறோம்.
இன்று சினிமாவில் காமெடி குறைந்துவிட்டது. ரொம்ப சீரியஸான படங்கள் எடுக்க தொடங்கி விட்டோம். பெரிய ஹீரோக்கள் படங்கள் எல்லாம் ஆக்ஷன் காட்சிகள் கொண்ட படங்களாக இருக்கிறது.
எனவே, சந்தானம் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி அவருக்கு பிடித்த ஹீரோக்கள், இயக்குனர்கள் ஆகியோருடன் இணைந்து காமெடி படங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அதற்கான ஒரு ஆரம்பம் தான் ‘எஸ்டிஆர் 49’ என்றார் சிம்பு.