சினிமாவில் இருந்து சூப்பர் ஸ்டார் ஓய்வு பெறுகிறாரா?: லதா ரஜினிகாந்த் விளக்கம்..

ரஜினியின் ஓய்வு பற்றி, அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்த தகவல்கள் காண்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் ரஜினி உடன் சத்யராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், அமீர்கான் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

தற்போது கூலி படத்தின் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதவிர, நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ரஜினிகாந்த் உடன் ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மோகன்லால், ஷிவராஜ்குமார் ஆகியோர் நடிக்கின்றனர். இதுதவிர தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கும் அனிருத் இசையமைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து ரஜினி சில இயக்குனர்களிடம் கதை கேட்டிருப்பதும் தொடர்கிறது. இவ்வாறி 74 வயதிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இச்சூழலில், இரண்டு படங்களும் முடிந்த பின்னர், ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இது குறித்து, ரஜினிகாந்தின் மனைவி லதா இந்த தகவலை மறுத்துள்ளார். அவர் கூறுகையில் ‘எனக்கு தெரிந்தால் சொல்லலாம், இன்னும் அதைப்பற்றி அவர் யோசிக்கவே இல்லை’ என தெரிவித்துள்ளார்.

latha says about rajini retirement from cinema
coolie movieRajinikanthsuper starரஜினிலதா