‘ஜனநாயகன்’ மற்றும் TVK பற்றிய தகவல்கள் காண்போம்..
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ ஷுட்டிங் ஜூன் மாதத்திற்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரேன், பிரியாமணி, மமிதா உள்பட பலர் நடிக்கின்றனர்.
விஜய்யின் விருப்பமான இயக்குனர்களான லோகேஷ் கனகராஜ், அட்லி, நெல்சன் ஆகியோர் ‘ஜனநாயகன்’ படத்தின் ஒரு பாடல் காட்சியில் தோன்றுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம், அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸாகிறது.
இப்படத்தில், விஜய் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர் ‘தளபதி வெற்றி கொண்டான்’ என கூறப்படுகிறது. படத்தில் “Thalapathy Vettri Kondan” என்பதை சுருக்கமாக TVK என்று தன் கையில் விஜய் பச்சை குத்தி இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. தன் கட்சி பெயரை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக, படத்திலும் அதே பெயருடன் வருகிறார். அரசியல் கதையம்சம் கொண்ட படம் என கூறப்படுவதால், ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
அண்மையில், இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று முடிந்து விஜய் சென்னை திரும்பினார். படத்தின் ஷுட் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் 1000 கோடி வசூல் சாதனை படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.