Browsing author

Suresh

சொந்த தயாரிப்பிலேயே, நடிகை சமந்தா தொடர்ந்து நடிக்க முடிவு..

தனக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிகை சமந்தா தொடர்ந்து நடிக்கவுள்ளார். இது குறித்த தகவல்கள் காண்போம்.. அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லீ இயக்கும்ர படத்தில் சமந்தா நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், அந்த படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை சமந்தா கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நயன்தாரா ஏற்கனவே தனது கணவருடன் இணைந்து ‘ரவுடி பிக்சர்ஸ்’ எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதேபோல ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிலையில், நடிகை சமந்தாவும் […]

விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ பட டீசர் வெளியீடு எப்போது?

‘ஐனநாயகன்’ படத்தின் டீசர் வெளியீடு பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. எச்.வினொத் இயக்கத்தில் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்து முடித்ததும் விஜய் முழு நேர அரசியலில் இறங்குகிறார். ‘ஜனநாயகன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அண்மையில் கொடைக்கானலில் ‘ஜனநாயகன்’ ஷூட்டிங் நடைபெற்றது. இதில் விஜய் கலந்துகொண்டார். இதையடுத்து, சென்னை சென்ற படக்குழு, இந்த வார இறுதிக்குள் ‘ஜனநாயகன்’ படத்தின் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை ‘ஜனநாயகன்’ படத்தில் இருந்து போஸ்டர்கள் மட்டுமே வெளியாகி […]

ஹீரோவாக நடிக்கிறார் லோகேஷ் கனகராஜ்: இயக்குனர் யார் தெரியுமா?

முன்னணி இயக்குனரான லோகேஷ் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ‘மாநகரம்’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ்.அடுத்ததாக ‘கைதி’ விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ என கவனம் ஈர்த்தார். மீண்டும் விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் கூட்டணி அமைத்தார். அவர் இதுவரை இயக்கிய ஐந்து படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட்டாகின. தற்போது ரஜினி நடிப்பில் ‘கூலி,’ படம் உருவாகி வருகிறது. இப்படம் ஆகஸ்ட. […]

‘தளபதி’ பட பாணியில் ‘கூலி’ படத்தில் ரஜினி அறிமுகம்: வைரலாகும் கிளிம்ஸ்..

ரஜினியின் ‘கூலி’ படத் தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் இயக்கிய ‘கூலி’ படம் வருகிற ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது. தற்போது இப்படத்திற்காக ஆவலுடன் காத்திருப்பவர்களுக்காக ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. ‘கூலி’ ரிலீசுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளது என்பதை அறிவிக்கும் விதமாக, இந்த ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது. வீடியோவில் ரஜினி உடன் உபேந்திரா, சத்யராஜ், நாகார்ஜுனா ஆகியோர் இடம்பெறும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. இந்தப் புதிய அப்டேட் […]

இந்திய இராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ பதிலடி: ரஜினி, இளையராஜா பாராட்டு..

மே மாதம் 7-ந்தேதி நள்ளிரவு இந்திய ராணுவம், தீவிரவாதிகள் தங்கியுள்ள பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம் தனது பதிலடிக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என பெயரிட்டுள்ளது. இந்திய ராணுவத்தின் நடவடிக்கைக்கும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருக்கும் நாடே பாராட்டுகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில், இந்த தாக்குதல் குறித்து மாநிலங்களவை உறுப்பினர், இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் பக்கத்தில், ‘இந்திய ராணுவத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். […]

அஜித்துக்கு புகழ்ச்சி விஜய்க்கு இகழ்ச்சி: திவ்யா சத்யராஜ் பதிவு, வைரல்..

திவ்யா சத்யராஜ் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு காண்போம்.. ‘உங்களுக்கு விஜய் பிடிக்குமா அல்லது அஜித் பிடிக்குமா என்று என்னிடம் சிலர் கேட்கின்றனர். நான் எப்போதும் சொல்வதைப் போல எனக்கு அஜித் பிடிக்கும். அவர் மிகச் சிறந்த நடிகர். மிக முக்கியமாக அவர் பெண்களை மதிக்கிறார். அவர் ஒரு குடும்பத் தலைவர். அவர் தனது வாழ்க்கையில் பெண்களை மிகுந்த மரியாதையுடன் நடத்துகிறார். மேலும் அவரது ரசிகர்கள் அவரை போற்றிப் பின்பற்றுகிறார்கள். அஜித் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் […]

சூரி எழுதிய ‘மாமன்’ படம் குறித்து, இயக்குனர் லோகேஷ் பேச்சு..

‘நடிகர் சூரியின் வளர்ச்சி பிரமிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது’ என தெரிவித்துள்ளார் லோகேஷ். இது பற்றிய விவரம் பார்ப்போம்.. தமிழ்த்திரை உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி தற்போது ஹீரோவாக கலக்கி வருகிறார் சூரி. இவரது நடிப்பில் தற்போது ‘மாமன்’ படம் வருகிற 16-ந்தேதி வெளியாகிறது. முன்னதாக ‘விடுதலை’ படத்தின் வாயிலாக சூரியை கதாநாயகனாக அறிமுகம் செய்தார் வெற்றிமாறன். பின்னர் கொட்டுக்காளி, கருடன், விடுதலை 2 படங்களில் அசத்தினார். இந்நிலையில் தற்போது ‘மாமன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ‘விலங்கு’ வெப் […]

ஜெயிலர்-2 படத்துக்காக, மோகன்லாலுடன் நெல்சன் சந்திப்பு..

ரஜினியின் ஜெயிலர்-2 பட தகவல்கள் காண்போம்.. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. பான் இந்தியா நட்சத்திரங்களையும் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க வைத்ததும் இப்பட வெற்றிக்கு காரணமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து உருவாகும் ஜெயிலர்-2 படத்தில், முதல் பாகத்தில் வந்த பிரபல நட்சத்திரங்கள் மீண்டும் இணைவார்களா? என ரசிகர்கள் எதிபார்த்துள்ளனர். இந்நிலையில், மோகன்லாலின் புதிய படம் ‘ஹ்ருதயபூர்வம்’ படப்பிடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவரைச் சந்தித்தார். படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்களும் […]

இந்திய இராணுவத்திற்கு, ஒரு ராயல் சல்யூட்: தவெக லீடர் விஜய்..

மே 7-ந்தேதி அதிகாலை, இந்திய விமானப்படை, பாகிஸ்தான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தி பயங்கரவாத முகாம்களை அழித்தது. ஏப்ரல் 22-ந்தேதி காஷ்மீரில் உள்ள பபல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்று பெயரிட்டுள்ளார். ராணுவத்தின் இந்த நடவடிக்கையை நாடே கொண்டாடுகிறது. பயங்கரவாத முகாம்களை மட்டுமே குறிவைத்து துல்லியமாக வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது. […]

லவ் யூ தலைவா: ரஜினியை நோக்கி கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி..

‘லவ் யூ தலைவா’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் ‘ரெட்ரோ’ இயக்குனர். இது பற்றிய விவரம் காண்போம்.. ‘ரெட்ரோ’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தை பாராட்டியதாக கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தலைவர் ‘ரெட்ரோ’ படத்தை பார்த்துவிட்டார். அவர் என்னிடம் சொன்னதை நான் பதிவிட்டு இருக்கிறேன். மொத்த குழுவும் எவ்வளவு மெனக்கெட்டுள்ளீர்கள் சூர்யாவின் நடிப்பு சூப்பர். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மிக அருமையாக இருந்தது. அந்த சிரிப்பு டச் சிறப்பாக இருந்தது. […]