ஜெயிலர்-2 படத்துக்காக, மோகன்லாலுடன் நெல்சன் சந்திப்பு..

ரஜினியின் ஜெயிலர்-2 பட தகவல்கள் காண்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த ‘ஜெயிலர்’ படம் 600 கோடிக்கும் மேல் வசூலித்தது. பான் இந்தியா நட்சத்திரங்களையும் சிறப்புத் தோற்றங்களில் நடிக்க வைத்ததும் இப்பட வெற்றிக்கு காரணமாக அமைந்தது.

இதனைத் தொடர்ந்து உருவாகும் ஜெயிலர்-2 படத்தில், முதல் பாகத்தில் வந்த பிரபல நட்சத்திரங்கள் மீண்டும் இணைவார்களா? என ரசிகர்கள் எதிபார்த்துள்ளனர்.

இந்நிலையில், மோகன்லாலின் புதிய படம் ‘ஹ்ருதயபூர்வம்’ படப்பிடிப்பில், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அவரைச் சந்தித்தார். படப்பிடிப்புத் தளத்திலிருந்து புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. மேலும் சத்யன் அந்திக்காட், சங்கீத் பிரதாப், மாளவிகா மோகனன் ஆகியோருடன் நெல்சன் இருக்கும் புகைப்படங்கள் பரவி வருகின்றன.

ஜெயிலர் முதல் பாகத்தில் மோகன்லாலுடன் நடித்த கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஜெயிலர் 2-லும் நடிப்பார். தெலுங்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவும் இப்படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்தின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தை இன்னும் ஆழமாக அணுகும் விதமாக 2- ம் பாகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

nelson meets mohanlal to discuss jailer 2 movie

actor mohanlalactor rajinikanthjailer 2 movieசூப்பர் ஸ்டார்பாலகிருஷ்ணா