லவ் யூ தலைவா: ரஜினியை நோக்கி கார்த்திக் சுப்பராஜ் நெகிழ்ச்சி..

‘லவ் யூ தலைவா’ என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார் ‘ரெட்ரோ’ இயக்குனர். இது பற்றிய விவரம் காண்போம்..

‘ரெட்ரோ’ படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படத்தை பாராட்டியதாக கார்த்திக் சுப்பராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தலைவர் ‘ரெட்ரோ’ படத்தை பார்த்துவிட்டார். அவர் என்னிடம் சொன்னதை நான் பதிவிட்டு இருக்கிறேன்.

மொத்த குழுவும் எவ்வளவு மெனக்கெட்டுள்ளீர்கள் சூர்யாவின் நடிப்பு சூப்பர். படத்தின் கடைசி 40 நிமிடங்கள் மிக அருமையாக இருந்தது. அந்த சிரிப்பு டச் சிறப்பாக இருந்தது. கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்’ என வாழ்த்தியுள்ளார். ரஜினியின் வாழ்த்தைக் கேட்ட பிறகு, தனது கால்கள் தரையிலேயே இல்லை. நான் இப்போது பறப்பது போல உணர்கிறேன். லவ் யூ தலைவா என பதிவிட்டுள்ள கார்த்திக் சுப்பராஜ்,

“பாரியை வாழ்த்திய ஜானி” என போட்டு சூர்யா, ரஜினி இருவரும் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

முன்னதாக, ரெட்ரோ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்பராஜ் தெரிவிக்கையில், ‘ரெட்ரோ’ கதை ரஜினி சாருக்காக எழுதியது தான். அந்தக் கதையில் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இருக்கும். அந்தக் கதையே எனக்கு காதல் கதையாக மாற்றவேண்டும் என்று தோன்றியது.

ஆகையால், காதல் கதையாக மாற்றி எழுதி வைத்தேன். அப்போது, சூர்யா சார் கதை ஏதும் இருக்கிறதா என்று கேட்டதும், இந்தக்கதை அவருக்கு சரியாக இருக்கும் என நினைத்துக் கொடுத்தேன். சூர்யாவும், கதையை படித்துவிட்டு, இது ரஜினி சாருக்காக எழுதினீர்களா என்று கேட்டார். நானும் ஆம் என்றேன்’ என கூறியிருந்தார்.

rajinikanth praises suriya act retro film
actor rajinikanthactor suriyaretro movieகார்த்திக் சுப்பராஜ்சூப்பர் ஸ்டார்