அர்ஜூன் தாஸின் ‘கான் சிட்டி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள‘கான் சிட்டி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படம்வரும் ஜூன் 26ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிரடி போஸ்டருடன் அறிவித்துள்ளது.

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பட அறிவிப்பு வெளியான நாள் முதல் அதன் வித்தியாசமான கதைக்களம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

ஏற்கனவே வெளியான டீசர் மற்றும்‘ரா ரா ரங்கையா’,‘நான் தான் கிங்கு’ ஆகிய இரண்டு சிங்கிள் பாடல்களும் சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்றன. ஷான் ரோல்டன் இசையில் உருவான பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளன.

நகர வாழ்க்கையில் கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் ஒரு நடுத்தர குடும்பத்தின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள‘கான் சிட்டி’, குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, பரபரப்பு மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ளது.

மங்களூர், சென்னை, மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டு உரிமையை Netflix நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக வெளியாகியுள்ள ஒவ்வொரு அப்டேட்டும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வெளியான ஜூன் 26 ரிலீஸ் அறிவிப்பு ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

தொழில்நுட்பக் குழு:

* எழுத்து & இயக்கம் – ஹரிஷ் துரைராஜ்
* தயாரிப்பு – பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
* ஒளிப்பதிவு – அரவிந்த் விஸ்வநாதன்
* இசை – ஷான் ரோல்டன்
* எடிட்டிங் – அருள் மோசஸ்
* கலை இயக்கம் – ராஜ் கமல்
* உடை வடிவமைப்பு – நவா ராம்போ ராஜ்குமார்
* ஸ்டண்ட் – ஆக்ஷன் சந்தோஷ்
* மக்கள் தொடர்பு – யுவராஜ்.

Arjun DasCon Cityகான் சிட்டி