நடிகை அனுஷ்காவால் நேர்ந்த 40 விபத்துகள்: எதனால் தெரியுமா?

அழகு என்றாலே ஆபத்தும் இருக்கிறது. அது எப்டின்னு பார்க்கலாம்..

மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி படத்தில் நடித்து முடித்த அனுஷ்கா, அடுத்ததாக காதி படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் விக்ரம் பிரபுவும் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார். க்ரிஷ் இயக்கியுள்ள இப்படம் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், அனுஷ்கா பற்றிய அதிர்ச்சித் தகவலை ‘காதி’ பட இயக்குனர் க்ரிஷ் தெரிவித்துள்ளார். இவர், இதற்கு முன் அனுஷ்காவை வைத்து ‘வேதம்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். இது தமிழில் ‘வானம்’ என்கிற பெயரில் ரிலீஸானது. அதில் சிம்பு நாயகனாக நடித்திருந்தார்.

இப்படம் ரிலீஸான சமயத்தில் அதன் விளம்பரத்திற்காக அனுஷ்காவின் மிகப்பெரிய பேனரை ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா என்கிற பகுதியில் வைத்திருந்தார்கள். அனுஷ்கா அப்படத்தில் கிளாமராக நடித்திருந்ததால், அவரின் பேனர் அந்த பகுதியாக சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அனுஷ்காவின் பேனரை பார்த்தபடியே ஓட்டி, 40-க்கும் மேற்பட்ட விபத்துகள் அப்பகுதியில் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, போக்குவரத்து காவல்துறையினர் அந்த பேனரை அங்கிருந்து நீக்கிய பின்னரே விபத்து நிகழாமல் இருந்தது’ என தெரிவித்துள்ளார்.

இதற்கு இணையவாசிகள், ஆதலால் ‘காதி’ பட அனுஷ்கா கிளாமர் காட்சியிருந்தால், பேனர் வைக்கும் இடம் கவனம்’ என பதிவிட்டு வருகின்றனர்.

actor vikram prabhuanushka shettyghaati movieஅனுஷ்கா ஷெட்டிகாவல்துறை