அல்லு அர்ஜுனுக்கு ஏன் இந்த அலட்சிப்போக்கு?: ஃபேன்ஸ் ஃபீலிங்ஸ்..

அல்லு அர்ஜுனின் அலட்சியம் குறித்து ரசிகர்கள் தெரிவித்துள்ள வருத்தம் காண்போம்..

சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா-2 படம், உலக அளவில் ரூ.1800 கோடி வசூல் சாதனை செய்தது. படத்தில் ராஷ்மிகா மந்தனாவும் ரசிகர்களை ஈர்த்தார்.

மேலும் பகத் ஃபாசில், சுனில், அனசூயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

அட்லீ-அல்லு படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வரும் நிலையில் அல்லு அர்ஜுன் தெரிவிக்கையில், ‘ இது ஒரு பான் வேர்ல்ட் படமாக உருவாக உள்ளது. அட்லீயின் எண்ணமும், என் எண்ணமும் ஒரே மாதிரிதான். கண்டிப்பாக, இது ஒரு தனித்துவமான படைப்பாக இருக்கும்’ என்றார்.

படத்தை சன் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இந்நிலையில், அல்லு அர்ஜுனின் ஏர்போர்ட் வீடியோ ஒன்று வெளியாகி விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளது.

அதில், அல்லு அர்ஜுன் செல்லும்போது ஒரு ரசிகர் ஆசையாக ஓடி வந்து அவருடன் செல்ஃபி எடுக்க முயல்கிறார். ஆனால், அல்லு அர்ஜுன் அவரைக் கண்டு கொள்ளாமல் கடந்து செல்கிறார். இதை பார்த்து பல ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள்..

‘பெரிய ஸ்டார்’ அல்லுவுக்கு ஏன் இந்த அலட்சியப்போக்கு?’ எனவும், அப்படியென்ன அவசர வாழ்க்கையோ? எனவும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். தற்போது இந்நிகழ்வு வைரலாகி வருகிறது. அல்லுவுக்கே அவரது நிலைமை தெரியும். இது குறித்து ரசிகர்களுக்கு விளக்கம் அளிப்பாரோ?

allu arjun ignoring his fans feelings viral

 

actor allu arjundirector atleepushpa 2 movieஅட்லீஅல்லு அர்ஜுன்