மனைவி குறித்து உணர்ச்சிப்பூர்வமாக பேசிய அஜித் குமார்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

மனைவி குறித்து நெகிழ்ச்சியாக பேசியுள்ளார் அஜித் குமார்.

Ajith Kumar spoke emotionally about his wife

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் அவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையும் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது.

ஒரு பக்கம் படங்களிலும் மறுபக்கம் கார் ரேசிலும் பிஸியாக இருந்து வரும் அஜித்திற்கு சமீபத்தில் பத்மபூஷன் விருது கொடுக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. அதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. அதனை குடும்பத்துடன் சென்று அஜித் வாங்கி இருந்த புகைப்படமும் வெளியாகி இருந்தது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது மனைவி ஷாலினி பற்றி அவர் உருக்கமாகப் பேசியதுதான். ஷாலினி தனக்காக பல தியாகங்களைச் செய்திருப்பதாகவும், அவரே தனது வலிமையின் தூண் என்றும்கூறியுள்ளார்.நான் எப்போதும் சரியான முடிவுகளை எடுத்ததில்லை. பல சமயங்களில் தவறான பாதையில் சென்றிருக்கிறேன். ஆனால், ஷாலினி கடினமான காலங்களில் கூட எனக்கு உறுதுணையாக இருந்தார். என்னை ஒருபோதும் ஊக்கமிழக்கச் செய்யாமல், என் கூடவே நின்றார். நான் இன்று அடைந்திருக்கும் அனைத்து வெற்றிகளுக்கும் முழு காரணம் அவர்தான். அந்த கிரெடிட்டை நான் அவளுக்கே கொடுக்கிறேன் என்று அஜித் உணர்ச்சிப்பூர்வமாக கூறினார்.

மனைவியை பற்றி அஜித்தின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ajith Kumar spoke emotionally about his wife
aboutAjith KumarAjith Kumar spoke emotionally about his wifeemotionallyhisspokewifeஅஜித்குட் பேட் அக்லிபத்மபூஷன் விருது