அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ படத்தின் அப்டேட்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘பத்தா’. ஸ்டார் ஸ்டுடியோ18 மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை A for Apple Studios மற்றும் Cine 1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. இப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி

‘பத்தா’ திரைப்படம் மூலம் இயக்குநர் பாலாஜி தரணிதரன் – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இதற்கு முன்பு இவர்களது கூட்டணியில் வெளியான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய திரைப்படங்கள் தனித்துவமான வரவேற்பைப் பெற்றன.

விஜய் சேதுபதியின் இயல்பான நடிப்பும், பாலாஜி தரணிதரனின் வித்தியாசமான கதை சொல்லும் பாணியும் மீண்டும் இணைந்துள்ளதால், ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீண்டும் இணையும் அட்லி – விஜய் சேதுபதி

‘ஜவான்’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லி – விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘ஜவான்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி, தற்போது அட்லி வழங்கும் ‘பத்தா’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

‘ஜெய் பீம்’ படத்தில் நடித்த லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இளம் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் SK ஒளிப்பதிவை மேற்கொண்டுள்ளார். ஆர். கலைவாணன் படத்தொகுப்பையும், டி. முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பையும் கவனித்துள்ளனர்.

அஷ்வின் முருகன் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ள இப்படத்தை முராத் கெதானி, பிரியா அட்லி, அலோக் ஜெயின் மற்றும் அஜித் அந்தாரே ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

விஜய் சேதுபதி – பாலாஜி தரணிதரன் கூட்டணி, அட்லியின் வழங்கல் மற்றும் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘பத்தா’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

AtleeBaththaPattaUpdate on Vijay Sethupathi’s Patta Produced by AtleeVijay Sethupathi