மீண்டும் திரையில் முதலமைச்சர் விஜய், த்ரிஷா காம்போ…!

விஜய் – த்ரிஷா கூட்டணியில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘திருப்பாச்சி’ திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. பேரரசு இயக்கிய இப்படம், விஜய்யின் திரையுலகப் பயணத்தில் முக்கியமான வெற்றிப் படமாக அமைந்தது.

- Advertisement -

தற்போது விஜய் அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில், ‘திருப்பாச்சி’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி மறுவெளியீடு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் – த்ரிஷா ஜோடியை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

‘முதலமைச்சர் விஜய்’ என்ற அரசியல் பின்னணியிலும், ‘திருப்பாச்சி’ படத்தின் ரீ-ரிலீஸ் ரசிகர்களிடையே கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

Once again on the big screen Chief Minister Vijay and Trisha’s iconic combo!thirupaachitrishavijay