துல்கர் சல்மானின் ‘ஐ அம் கேம்’ படத்தின் முதல் பாடல் வெளியானது!

துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகி வரும் ‘ஐ அம் கேம்’ (I Am Game) திரைப்படத்தின் முதல் பாடலான ‘அருகே அருகே’ வெளியாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இப்பாடலை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியிருக்க, அர்மான் மாலிக் பாடியுள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பாடல் வெளியாகியுள்ளது. பாடல் வெளியான சில மணி நேரங்களிலேயே ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகிறது.

துல்கர் சல்மானின் வேஃபரர் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை ‘RDX’ படத்தின் இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் இயக்குகிறார். துல்கர் சல்மான் மற்றும் ஜோம் வர்கீஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படம், துல்கர் சல்மானின் 40வது திரைப்படமாகும்.

ஆண்டனி வர்கீஸ், மிஷ்கின், கயாடு லோஹர், கதிர், பார்த் திவாரி, சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிம்ஷி காலீத் ஒளிப்பதிவு செய்ய, சமன் சாக்கோ படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.

முன்னதாக வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ‘அருகே அருகே’ பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

பிரம்மாண்டமான ஃபேண்டஸி திரில்லராக உருவாகியுள்ள ‘ஐ அம் கேம்’ திரைப்படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Antony VargheseArugey ArugeyDulquer SalmaanDulquer Salmaan’s ‘I Am Game’ First Single ‘Arugey Arugey’ ReleasedI'M GAMEKathirKayadu LoharMysskinSamyuktha ViswanathanVinay Forrt